in

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கோதூரில் தீவிர வாக்கு சேகரிப்பு


Watch – YouTube Click

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கோதூரில் தீவிர வாக்கு சேகரிப்பு

 

கரூர் பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுக வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கோதூர் ரோடு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு.

தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகின்ற 19ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோதூர், திருக்காம்புலியூர், வேலுச்சாமிபுரம், கே.பி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த வாகனத்தில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேட்பாளர் தங்கவேலுடன் தீவிர தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார்.

நிகழ்ச்சியில் வேட்பாளர் தங்கவேல் மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வரவேற்க அப்பகுதி பொதுமக்கள் ஆலாத்தி தட்டுடன் நீண்ட வரிசையில் நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்பொழுது அங்கிருந்த குழந்தைகள் உடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.

ஜோதி மணியும் நானும் நேருக்கு நேர் பேசுவதற்கு தயார் அதிமுக ஆட்சியில் அமைச்சராக நான் இருந்தபோது என்ன திட்டங்கள் செய்தேன் என்று கூறுகிறேன் ஜோதி மணியால் கூற முடியுமா? அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஜோதிமணி கொண்டு வந்ததாக பிரச்சாரத்தின் போது கூறி வருகிறது. அதிமுக ஆட்சியில் கொண்டு எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தபோது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கொண்டு வந்தார் யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது.

ரிங் ரோடு கொண்டு வந்ததாக ஜோதிமணி கூறி வரும் நிலையில் டெல்லியில் உள்ள ரிங் ரோட்டை பார்த்திருப்பார்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புகலூர் பகுதியில் காவிரியின் குறுக்கே 450 கோடி ரூபாயில் கதவனை, அரவக்குறிச்சிக்கு குடிநீர் திட்டம், அரசு கலைக் கல்லூரி கொடுத்து அதிமுக அரசு 3 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் என்ன செய்தார்கள்.

என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று பொய்யை பேசி வருகின்றனர்.

கருணாநிதி இரண்டு ஏக்கர் நிலம் தருகிறேன் என்று கூறியது போலவே எல்லா வாக்குறுதியும் உள்ளது ஜோதிமணி என்ன செய்தார் சொல்வதற்கு ஒரு திட்டமும் செய்யவில்லை.

பொய்யை மட்டும் முதலீடாக வைத்து வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

அனைத்து திட்டங்களும் மீண்டும் கிடைக்க வேண்டும் என்றால் அதிமுக வேட்பாளர் தங்கவேலுவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று அப்பொழுது தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

தர்கா பகுதியில் அவார்ட் வழங்கும் நிகழ்ச்சி

தேர்தல் நேரத்தில் புறம் பேசுவது ஒன்றும் புதியதல்ல திண்டிவனத்தில் டாக்டர் ராமதாஸ் பேட்டி