in

தேர்தல் நேரத்தில் புறம் பேசுவது ஒன்றும் புதியதல்ல திண்டிவனத்தில் டாக்டர் ராமதாஸ் பேட்டி


Watch – YouTube Click

தேர்தல் நேரத்தில் புறம் பேசுவது ஒன்றும் புதியதல்ல -திண்டிவனத்தில் டாக்டர் ராமதாஸ் பேட்டி.

திண்டிவனம் அடுத்த தைலாரத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .

பின்பு அங்குள்ள கட்சி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த டாக்டர் ராமதாஸ்,
இட ஒதுக்கீட்டிற்கு எதிரான பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக
எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவிப்பதாக கேட்ட கேள்விக்கு தேர்தல் நேரங்களில் இது போன்று புறம் பேசுவது ஒன்றும் புதிதல்ல என்று கூறினார்.
அதிமுக – விசிக வுடன் கூட்டணி பேசி வந்த நிலையில்தான் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பது பற்றி கேட்டபோது ,இது சரியான செய்தியும் அல்ல,சொல்ல விரும்பவும் இல்லை என்று தெரிவித்தார்.

இட ஒதுக்கீடு சம்பந்தமான எந்த முன்னேற்றமும் இல்லையே ஏதாவது போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதா ?என்ற கேள்விக்கு நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் முன்னேற்றம் தேவை என்று பதில் அளித்தார். இதில் மாவட்ட செயலாளர். ஜெயராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Watch – YouTube Click

What do you think?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கோதூரில் தீவிர வாக்கு சேகரிப்பு

அதிமுகவின் மீது பாஜகவின் காவிக்கரை படிந்துள்ளது ஜவாஹிருல்லா எம் எல் ஏ பேச்சு