தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்
டெல்லியில் வேளான் சட்டதத்திற்க்கு எதிராக நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் விவசாயிகள் பட்டினியால் இறந்தனர் -திண்டிவனம் தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து இன்று சிறுபான்மை பிரிவு நலன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் திண்டிவனத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வாக்கு சேகரித்தார் 500 – க்கும் மேற்ப்பட்ட இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து சென்ற திமுக – கூட்டணி கட்சி தொண்டர்கள் பானை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் செஞ்சி.மஸ்தான், திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு இரண்டு லட்சம் மின் இணைப்புகள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. கலைஞர் ஆட்சியில் நடைமுறைக்கு வந்த திட்டங்களை முதல்வர் மு க ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி வருகின்றார்.
ஆனால் வேளாண சட்டத்திற்க்கு எதிராக டெல்லியில் போராடிய விவசாயிகள் அவர்களது கோரிக்கைகள் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட நிலையில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் விவசாயிகள் உயிர் இழந்தனர் என்று கூறினார்.
மேலும் அவர் பேசும் போது, அம்பேத்கர் அவர்களால் போற்றி உருவாக்கப்பட்ட சட்டத்தை குழி தோண்டி புதைக்கும் மோடி ஆட்சியை அப்புறப்படுத்த நேற்று டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளில் உறுதிமொழி ஏற்று உள்ளோம் என்று கூறினார்.