in

செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணர் ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம் விழா


Watch – YouTube Click

செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணர் ஆலயத்தில் தமிழ்புத்தாண்டை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டை ஆயிரம் கல் தூண் மண்டபத்தில் அமைந்துள்ள வெங்கட்ரமணர் ஆலயத்தில் தமிழ்புத்தாண்டை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சியாக நடைபெற்றது.

சித்திரை 1 ம்தேதி குரோதி வருட தமிழ் புத்தாண்டை முன்னிட்டு செஞ்சிக்கோட்டைமலையடிவாரத்தில் ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு ஊஞ்சல் உற்சவ விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு அன்று காலை மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரணருக்கு சிறப்பு திருமஞ்சனம் ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்விக்கப்பட்டு,

பல்வேறு மலர்கள் தங்க ஆபரண நகைகள் கொண்டு அலங்காரம் செய்விக்கப்பட்டு, ஊர்வலகமாக ஆயிரங்கால் மண்டபத்தில் அலங்கரிப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

தொடர்ந்து பக்தர்கள் ஊஞ்சலை அசைத்தவாறு ராமதுதி பாடல்களை பாடியபின் மகா தீபாரதனை நடைபெற்றது.

தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் செஞ்சி ஸ்ரீஜனனி நாட்டியாலயா குழுவினரின் பரதநாட்டியம் நடைபெற்றது.

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டடுசாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்வி குழுமத்தின் தலைவர் ஆர்.ரங்கபூபதி, கல்லூரி இயக்குனர் சாந்திபூபதி, வழக்குரைஞர் தமிழ்ச்செல்வம், ஜெயந்திதமிழ்ச் செல்வம், உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர்.

அதேபோல் செஞ்சி மாநகரின் ஈசானிய மூலையில் அமைந்துள்ள சித்தர்கள் வழிபாடு செய்த திருத்தலமாக விளங்கும் சிறுகடம்பூர் ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

காலை மூலவர் காசி விஸ்வநாதர்க்கும்,நந்தியன் பெருமானுக்கும் பால் தயிர் சந்தனம் விபூதி பன்னீர் பஞ்சாமிர்தம் போன்ற வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் சந்தனகாப்பு அலங்காரத்துடன் பலவகை பூக்கள் மற்றும் பலவகை பழங்கள் கொண்டு
அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை கட்டப்பட்டது.

திருக்கோவிலில் அமைந்திருக்கும் விநாயகப் பெருமான்,ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி,நந்தியன் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தனர்.

மற்றும் பிரதோஷ நாயகரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பக்தர்கள் ஏராளமான கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் ஒருநாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடு ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Watch – YouTube Click

What do you think?

ஈரானுக்கு தக்க பதிலடி இஸ்ரேல் அதிரடி

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்ட விழா லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்பு