கரூரில் இரவு நேரத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதன் காரணமாக ஒரு வாக்குச்சாவடிக்கு 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கரூர் பாராளுமன்ற தொகுதியானது வேடசந்தூர், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணாயபுரம், மணப்பாறை, விராலிமலை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய தொகுதியாகும்.
கரூர் பாரளுமன்றம் தேர்தல் காலை 7.00 மணிக்கு தொடங்கி பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றினர் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் மாநகராட்சி பள்ளி குழு தலைவர் வசுமதி பிரபு தலைமையில் திமுகவைச் சார்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ரவுண்டானா பகுதியில் வான வேடிக்கை மற்றும் சரவெடிகள் வைத்து கொண்டாடினர்.
இதில் தமிழக முதல்வர் தளபதி வாழ்க, அமைச்சர் சின்னவர் உதயநிதி வாழ்க, செந்தில் பாலாஜி வாழ்கவே, வெற்றி வெற்றி வெற்றியை கைச்சின்னம் வெற்றியை என கோஷங்கள் எழுப்பினர்.
குறிப்பாக தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த அடுத்து திமுகவினர் அனைவரும் ஒன்று திரண்டு இரவு நேரத்தில் பட்டாசு வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.