நீதிமன்றத்தில் வழக்கு… லாபத்தை கொடுக்காமல் ஏமாற்றிய மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பாளர்
கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி வசுலை வாரி குவித்த மஞ்சுமெல் பாய்ஸ் மலையாள திரைப்படம் கேரளாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.
இப்படத்தின் தயாரிப்பாளர் ஷான் ஆண்டனி தனக்கு லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றிவிட்டதாக சிராஜ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இயக்குனர் எஸ் சிதம்பரம் இயக்கத்தில் உருவான மஞ்சுவலி பாய்ஸ் மிக குறைந்த பட்ஜெட்டில் வெளியானாலும் ரசிகர்களின் ஆதரவுடன் வசூலை வாரிக் குவித்தது கமல் நடித்த குணா படத்தில் கண்மணி அன்போடு காதலன் என்ற பாடல் படம் ஆரம்பிக்கும் பொழுதே தொடங்கப்பட்டு படம் இறுதிவரை பயணிப்பதால் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் மஞ்சுமெல் இயக்குனர் ஆழமா உட்கார்துட்டார்.
11 நண்பர்கலை சுற்றி படமாக்கப்பட்ட இந்த கதை மற்றும் நண்பர்களுக்குள் இருக்கும் காதலை சொன்ன விதம் மற்றும் கண்மணி அன்புடன் காதலன் என்ற பாடலின் கண்ணோட்டமே இந்த படத்தை பார்த்த பிறகு மாறிவிட்டதாக கமலே கூறியிருக்கிறார்.
இத்தனை வருடம் கழித்து தன் படத்தின் பாடலுக்கு பெரும் சிறப்பை வழங்கி விட்டீர்கள் என்று கமல் மனதார பாராட்டி இருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஷான் ஆண்டனி தனக்கு லாபத்தில் பங்கு தரவில்லை என்று சிராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்து கூறியதாவது ஏழு கோடியை இப்படத்திற்காக நான் முதலீடு செய்தேன் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் தருவதாக கூறினார்.
ஆனால் இன்று வரை பணம் தரவில்லை ..ஏழு கோடியாவது திருப்பி தர வேண்டும் அதையும் தராததால் நான் வழக்கு போட முடிவு செய்துள்ளேன்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தயாரிப்பாளர்களின் வங்கி கணக்கை முடக்க உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பாக விளக்கம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது இவர்கள் மேல் காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.