பழனி கோயிலுக்கு 7 லட்சம் மதிப்பிலான பேட்டரிகார் நன்கொடை
பழனி கோயிலுக்கு அமெரிக்காவில் பணிபுரியும் முருக பக்தர் 7 லட்சம் மதிப்பிலான பேட்டரி காரை நன்கொடையாக வழங்கினார்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நீதிமன்ற உத்தரவுபடி கிரி வீதிகளில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிரி வீதியில் உள்ள வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதனால் கிரிவீதியில் பக்தர்கள் எளிதாக செல்வதற்கு இலவசமாக பேட்டரி வாகனங்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் கோவிலுக்கு ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில் கூடுதல் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் கூடுதல் பேட்டரி வாகனங்கள் இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அடுத்து இன்று கோயில் நிர்வாகம் சார்பில் 26 லட்சம் மதிப்பிலான புதிய ஆம்புலன்ஸ் வாகனமும், அமெரிக் காவில் பணிபுரியும் முருக பக்தர் அகிலன் ரவிச்சந்திரன் சார்பில் 7 லட்சம் மதிப்பிலான பேட்டரி வாகனமும் பூஜை செய்யப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
பழனி கோயிலுக்கு தொடர்ச்சியாக நன்கொடை அளித்து வருவதாகவும் முதியவர்கள் குழந்தைகள் எளிதாக பயணம் செய்யும் வகையில் பேட்டரி கார் வாங்கி கொடுத்ததாக ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.