in

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் சித்திரை மாத பௌர்ணமி விளக்கு பூஜை 108 பெண்கள் பங்கேற்று மனம்


Watch – YouTube Click

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் சித்திரை மாத பௌர்ணமி விளக்கு பூஜை 108 பெண்கள் பங்கேற்று மனம் உருகி பிரார்த்தனை செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பிரசித்தி பெற்ற திருத்தலமாக விளங்கும் அங்காளம்மன் திருகோயிலில் சித்திரை மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருகோயில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்தார்.

மேலும் உற்சவ அம்மனுக்கு பலவித மலர்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மாலை 6 மணியளவில் உற்சவ அம்மனுக்கு பம்பை மேளதாளம் முழங்க திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திரளான 108 பெண்கள் பச்சை ரோஸ் கலந்த சீருடையில் நீண்ட வரிசையில் அமர்ந்து விளக்கு பூஜையில் ஈடுபட்டு மனம் உருகி பிரார்த்தனை செய்தனர்.

இதனை தொடர்ந்து அம்மனுக்கு அர்ச்சனைகள் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருளை
பெற்று சென்றனர்.

விழா ஏற்பாட்டினை திருக்கோயில் உதவி ஆணையர் ஜீவானந்தம் அறங்காவலர் குழுத்தலைவர் சுரேஷ் உடன் அறங்காவலர்
குழு உறுப்பினர்கள் மற்றும் மேலாளர் மணி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Watch – YouTube Click

What do you think?

சட்டப்பேரவை வளாகத்தில் ரூ.2.5 லட்சத்தில் புதிய தீயணைப்பு கருவிகள் மற்றும் செயல் விளக்கங்கள்

7 பேருக்கு ஆயுள் தண்டனை ஶ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு