நாமக்கல் பரமத்தி வேலூர் பேட்டை புது மாரியம்மன் ஆலய சித்திரை திருவிழா
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேட்டை ஸ்ரீ சக்தி கண்ணணூர் புது மாரியம்மன் ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு23 4 2024 செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திருவிழா காப்பு கட்டி கம்பம் நடும் நிகழ்வு மிக விமர்சையாக நடைபெற்றது.
4-ம் நாள் வெள்ளிக்கிழமை அன்று காலை முதல்பக்தர்கள் புனித நீர், பால்,, மஞ்சள் நீர் ஊற்றியும் வணங்கினர்.
பின்னர் புதுமாரியம்மனுக்கு பஞ்சாமிர்தம் தேன், பால், தயிர், மஞ்சள் திருமஞ்சனம் சந்தனம் குங்குமம் கொண்டு அபிஷேகமும்.
பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபம் காண்பிக்கப்பட்டது அப்போது கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள புனித கம்பத்திற்கு மகாதீபம் காண்பிக்கப்பட்டது.
பின் உற்ச புது மாரியம்மன் காமதேனு வாகத்தில் அலங்காரம் செய்யப்பட்டு பேட்டை பகுதியில் திருவீதி உலா மேலதாளத்துடன் மிக விமர்சையாக நடைபெற்றன.
இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் பெற்றனர். அன்று மாலை பலவகை மலர்கள் கொண்டு பூச்சொரிதல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. அப்போது மூலவர் புதுமாரியம்மனுக்கு மஹா தீபம் காண்பிக்கப்பட்டன.
பிறகு உற்சவ மாரியம்மன் காமதேனு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்து திருவீதி உலா மிக விமர்சையாக நடைபெற்றது.29ஆம் தேதி திங்கட்கிழமை மாலை வடிசோறு, அக்கினி சட்டி நிகழும் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பூ மிதித்தல் நிகழ்வு
மே – 1ம் தேதி பொங்கல் மாவிளக்கு கிடா வெட்டுதல் அழகு போடுதல் அக்னி சட்டி எடுத்தல் நிகழ்வும்
மே – 2ந்தி தேதி கம்பம் காவிரி ஆற்றுக்கு செல்லும் நிகழ்வும்
மே – 3 தேதி மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறுகின்றன. கோவில் நிர்வாகத்தின் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.