in

உத்ரகாண்ட்டில் காட்டுத்தீ 3 பேர் கைது ராணுவம் களம் இறங்கியது


Watch – YouTube Click

உத்ரகாண்ட்டில் காட்டுத்தீ 3 பேர் கைது ராணுவம் களம் இறங்கியது

ராணுவம் களம் இறங்கியது

உத்ரகாண்ட்டில் பரவும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த ராணுவ ஹெலிகாப்டர் களமிறக்கப்பட்டுள்ளது.

கோடை காலத்தில் காட்டுத்தீ அதிகளவில் பரவும் சூழல் நிலவும். எனவே அதனை கருத்தில் கொண்டு, காட்டு பகுதியில் தீப்பற்றக்கூடிய பொருட்களோ, அல்லது சிறிய அளவில் தீ மூட்டுவதோ கூட பெரிய அளவிலான காட்டுதீக்கு வழிவகுத்து விடும்.

உத்தரகாண்ட் மாநிலத்தில், நைனிடா பகுதியில் காட்டுத்தீ பரவி தற்போது அதனை தணிக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தீயை அணைக்கும் முயற்சியில் ராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளது . இதற்காக IAF MI-17எனும் ராணுவ ஹெலிகாப்டர் நைனிடா பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

இதுவரை, உத்தரகண்ட், குமாவோன் பகுதியில் 26 தீ சம்பவங்களும், கர்வால் பகுதியில் 5 தீ சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இதுவரை மொத்தமாக 33.34 ஹெக்டேர் வனபகுதி பாதிக்கப்பட்டுள்ளன. இந்த காட்டுத்தீ ஏற்பட காரணமாக இருந்ததாக கூறி, ஜகோலி மற்றும் ருத்ரபிரயாக் பகுதிகளில் காட்டுப்பகுதியில் தீவைத்ததாக சந்தேகிக்கப்படும் 3 நபர்களை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களில் நரேஷ் பட் என்பவர் மட்டுமே, தங்களிடம் உள்ள செம்மறி ஆடு மேய்ச்சலுக்காக, புல் பயிரிட பழைய புல் பயிர்களுக்கு தீயை பற்றவைத்ததாக ஒப்புக்கொண்டார். மற்றவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. காட்டு தீ அதிகம் பரவி வரும் காரணத்தால், நைனி நதிக்கரையில் படகு சவாரி தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் முதல், உத்தரகண்ட் மாநிலத்தில் 575 காட்டுத் தீ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காட்டுத்தீயால் இதுவரை 689.89 ஹெக்டேர் வனப்பகுதி சேதமடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Watch – YouTube Click

What do you think?

பொறியியல் கல்லூரி ஆண்டு விழாவில் சிறப்புரை ஆற்றிய – திரைப்பட நடிகர் சதீஷ்

ஜூன் 30-ஆம் தேதிக்குள் தோ்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் – தோ்தல் துறை உத்தரவிட்டுள்ளது