பொன்பத்தி ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் மகாபாரத பிரசங்க அக்னிவசந்த திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பொன்பத்தி கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் சித்திரை மாத ஸ்ரீ மகாபாரத பிரசங்கம், அக்னி வசந்த விழா மற்றும் கிராம தேவதை திருத்தேர் உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை முன்னிட்டு 26-ஆம் தேதி காலை 6 மணிக்கு மூலவர் திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு ஆராதனைகள் செய்து மகாதீபாரதனை நடைபெற்றது.
மாலை 6:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து துவஜாரோகணம் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கொடியேற்று விழா நடைபெற்றது.
தொடர்ந்து பகல் இரவு ஆகிய இரண்டு வேளைகளிலும் மகாபாரத பிரசங்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து மே மாதம் 6-ஆம் தேதி திங்கட்கிழமை செம்பாத்தம்மன், பச்சையம்மன்,முனீஸ்வரன், கெங்கை அம்மனுக்குகாப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் தொடர்ந்து வானவேடிக்கையுடன் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும், மே 8-ஆம் தேதி புதன்கிழமை ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கல்யாண வைபவமும், மே 11 ஆம் தேதி சனிக்கிழமை தவசு ஏறும் நிகழ்ச்சியும், மே 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு செம்பாத்தம்மன், பச்சையம்மன் திருத்தேர் உற்சவமும், மே 15 ஆம் தேதி புதன்கிழமை மாலை 2.00 மணிக்கு துரியோதனன் படுகலமும், 3.00 மணிக்கு தீமிதி விழாவும், மே 16ஆம் தேதி வியாழக்கிழமை தர்மர் பட்டாபிஷேகம் விழா நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை அனைத்து உபயதாரர்கள், இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.