தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில்
புஷ்ப அலங்காரத்தில் கருட சேவை சுவாமி புறப்பாடு
தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் அருள்மிகு ஶ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. குளத்தில் பிரசன்னமான பெருமாளாக திகழ்கிறார். தஞ்சை பெரிய கோயிலை போல இராஜ கோபுரம் சிறியதாகவும் விமானம் பெரியதாகவும் இருக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. 12 தமிழ் மாதங்களை குறிக்கும் வகையில் 12படிகள் மீது பெருமாளின் 12 நாமாக்களை சொல்லி நடந்து சென்றால் பெருமாள் அனுக்ரஹம் நிச்சயம் கிடைக்குமாம். இந்த படிகளுக்கு பக்தர்கள் ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் தமிழ் மற்றும் தெலுங்கு புத்தாண்டு தினங்களில் சூடம் ஏற்றி படி பூஜை செய்வது வழக்கம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் கடந்த 23. ஆம் தேதி கொடியேற்றத்துடன். தொடர்ந்து, விழா நாட்களில் மாலை பல்வேறு வாகனங்களில் பெருமாள், தயார் வீதி உலா புறப்பாடு நடைபெறுகிறது.
இதில் நான்காம் நாளான மாலை கருட சேவை வைபவம் நடைபெற்றது.
சன்னதியிலிருந்து மாலை 6 மணியளவில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் கருட பகவானை பக்தர்கள் சுமந்து கோவில் உட்பிரகாரம் சுத்தி வந்து பின்னர் கருட பகவானுக்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
தொடந்து கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருள திருவீதியுலா நடைபெற்றது.