in

இஸ்லாமிய அரபிக் கல்லூரியில் பட்டம் வழங்கும் விழா மற்றும் கண்காட்சி நடைபெற்றது


Watch – YouTube Click

இஸ்லாமிய அரபிக் கல்லூரியில் பட்டம் வழங்கும் விழா மற்றும் கண்காட்சி நடைபெற்றது

 

T.பண்டாரவடையில் இஸ்லாமிய அரபிக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் நிறைவு செய்த மாணவிகளுக்கு ஆலிமா பட்டம் வழங்கும் விழாவும் மாணவர்களின் கண் கவர் இஸ்லாமிய கண்காட்சியும் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த T.பண்டாரவடை கிராமத்தில் இஸ்லாமிய அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா எஸ்.எம்.ஜக்கரியா தலைமையில் சிறப்பு அழைப்பாளராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணைத் தலைவரும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான அல்ஹாஜ் அப்துல் ரஹ்மான் MP கலந்து கொண்டு அரபிக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் படித்து முடித்த நான்கு மாணவிகளுக்கு ஆலிமா பட்டம் வழங்கினார்.

முன்னதாக மாணவர்களின் இஸ்லாமிய கண்காட்சியையும் திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் நஜிமுள்ளாஹ். அமானுல்லாஹ். அப்துல்வாஹிது. முகமது இக்பால் மற்றும் ஊர் நாட்டான்மை,பஞ்சாயத்தார்கள், முக்கியஸ்தர்கள் ஆண்கள் பெண்கள் என 1000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

அணைகள் மற்றும் கண்மாய்கள் நீர் வற்றி வருவதால் விவசாயிகள் கவலை

நன்கு யோசித்து தான் நான் இதை செய்கிறேன் விமர்சனம் வேண்டாம் — Samantha