வந்தவாசியில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு இலவச குடிநீர்
பந்தல் திறப்பு
சட்டமன்ற உறுப்பினர் எஸ். அம்பேத்குமார் தொடக்கி வைத்தார் –
வந்தவாசியில் புதிய பேருந்து நிலையம், நகராட்சி அலுவலக பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு இலவச குடிநீர் பந்தல்களை சட்டமன்ற உறுப்பினர் எஸ். அம்பேத்குமார் தொடக்கி வைத்தார்
கோடை வெயிலின் தாக்கத்தில் தவிக்கும் பொதுமக்களுக்கு உதவும் வகையில், புதிய பேருந்து நிலைய அணுகுசாலை அருகே இலவச குடிநீர் பந்தல் தொடக்க நிகழ்ச்சி நகர திமுக செயலாளர் எ.தயாளன் தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற உறுப்பினர் கிஷோர் குமார் முன்னிலை வகித்தார்.அவைத்தலைவர் நவாப் ஜான் அனைவரையும் வரவேற்றார்.
பொதுமக்களுக்கான இலவச குடிநீர் பந்தலை வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் அம்பேத்குமார் தொடக்கிவைத்து, குடிநீர், பழவகைகள் மற்றும் குளிர்பானங்கள் வழங்கினார் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல், வந்தவாசி நகராட்சி அலுவலகம் அருகே நகர் மன்ற தலைவர் எச்.ஜலால் தலைமையில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார் பங்கேற்று பொதுமக்களுக்கு தர்பூசணி இளநீர் மோர் மற்றும் குளிர் பானங்களை வழங்கினார்.இதில் வந்தவாசி நகர திமுக செயலாளர் எ.தயாளன், நகர் மன்ற துணைத் தலைவர் அன்னை சீனிவாசன், அவைத்தலைவர் நவாப்ஜான், நகர் மன்ற உறுப்பினர் நாகூர் மீரான், கிஷோர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.