12ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ள மாணவ, மாணவிகளுக்கு வழிக்காட்டி கல்வி கண்காட்சி தஞ்சையில் நடைப்பெற்று; 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு
தஞ்சை தமிழரசி திருமண மண்டபத்தில் E2W ஸ்டடி சென்டர் சார்பில் மாபெரும் கல்வி கண்காட்சி நடைப்பெற்றது
27, 28 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற கல்வி கண்காட்சியை தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண் இராமநாதன் E2w ஸ்டடி சென்டர் தலைவர் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
இக்கல்வி கண்காட்சியில் தமிழகத்தின் தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் அரங்குகள் அமைத்து இருந்தன.
கலை அறிவியல் முதல் பொறியியல் படிப்பு வரை எந்த துறை சார்ந்த படிப்புகளை படிக்கலாம் அதற்கான வேலை வாய்ப்புகள் எவ்வாறு உள்ளது என அந்தந்த துறை சார்ந்த கலவியாளர்கள், அனுபவம் மிக்கவர்கள் விளக்கி கூறினார்கள்.
பெற்றோருடன் வந்த மாணவ மாணவிகளுக்கு இக்கல்வி கண்காட்சி மிகுந்த பயன் உள்ளதாகவும், என்ன படிக்கலாம் என்கிற தெளிவு கிடைத்ததாகவும் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் இயக்குனர் வைர பாலா தியாகராஜன், மருது பாண்டியன் கல்வி நிறுவனங்கள் செயலர் மற்றும் நிர்வாக அறங்காவலர் மருது பாண்டியன், குந்தவை நாச்சியார் கலைக்கல்லூரி துணை ஆட்சியர் நிலை ராஜாராமன், முதல் நிலை மேலாளர் E2w ஸ்டடி ஜோதிபாசு கதிர்வேல், தஞ்சாவூர் தெற்கு காவல் ஆய்வாளர் ரமேஷ் , டிவிஎஸ் மருத்துவமனை மருத்துவர் சாத்தப்பன் எம் ஆர் மருத்துவமனை மருத்துவர் ராதிகா மைக்கேல் உறுதிமொழி ஆணையர் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் கரந்தைத் தமிழ்ச் சங்கம் செந்தமிழ்ச்செல்வன், E2w இணை மேலாளர் பிரவீன் ராஜ் லிட்டர் பலர் பங்கேற்றனர்.
இந்த மாபெரும் கல்வி கண்காட்சி சுமார் 12,000-க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.