எனது முன்னால் மனைவியையும் குழந்தையும் இன்றும் அரவணைத்து செல்கிறேன் நடிகர் சரத்குமார்
நடிகர் சரத்குமார் அன்னையில் லிட்டில் டாக்ஸ் என்ற மீடியாவிற்கு பேட்டி அளித்த பொழுது நான் எனது முன்னால் மனைவியையும் குழந்தையும் நான் இன்றும் அரவணைத்து செல்கிறேன் அவர்களுக்கு நல்ல அப்பாவாக நான் இருக்கிறேன் .
மேலும் தன்னுடைய மனைவி ராதிகா எவ்வாறு தன் முன்னாள் மனைவியான சாயாவை பார்த்துக் கொள்கிறார் என்பதை குறித்தும் கூறியிருந்தார்.
நான் திருமண நாளன்று 15 நிமிடம் தாமதமாக வந்தேன் என்று ராதிகா என் மேல் குற்றம் சுமத்தினார். ஆனால் நான் சரியான நேரத்திற்கு தான் வந்தேன் நான் தப்பிக்க முயற்சி செய்திருக்கிறேன் என்று நினைத்ததாக ராதிகா என்னை அடிக்கடி கிண்டல் செய்வார்.
இன்றும் பல குடும்பங்கள் இணைகின்றது பிரிகின்றது ராதிகா என்னுடைய நண்பர் அதன் பின்னர்தான் அவர் என்னுடைய மனைவி அவர் என்னுடைய குடும்பத்தை புரிந்து கொண்டு என்னுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்துகிறார்.
நான் என் முன்னாள் மனைவி சாயவை பிரிந்தாலும் அவரையும் அவரது குடும்பத்தையும் குழந்தைகளையும் அரவணைத்து சரியான நேர்கோட்டில் கொண்டு செல்கிறேன்.
ராதிகா வரலட்சுமியை என் முன்னால் மனைவியின் குழந்தை யாக பார்த்ததில்லை அவருக்கு மரியாதை கொடுப்பார். சொல்லப்போனால் நான் வரலட்சுமியை சினிமாவில் நடிக்க கூடாது என்று மறுத்த பொழுது ராதிகாவும் வரலட்சுமி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து ஏன் நடிக்க கூடாது என்று சொன்னிர்கள் என்று கேட்டு என்னை உட்கார வைத்து கேள்வி கேட்டார்கள்.
அந்த அளவிற்கு ராதிகா என்னுடைய குடும்பத்தின் மேல் அக்கறை உள்ளவர் அக்கறை மட்டுமல்ல எனது குடும்பத்தை அழகாக நடத்தி செல்கின்றார் என்று தனது மனைவி ராதிகாவை புகழ்ந்து தள்ளி விட்டார் சரத்குமார்.