புதுச்சேரியில் கொரியர் நிறுவனங்கள் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கொண்டு வரப்படுவதாக வந்த தகவலை அடுத்து கொரியர் நிறுவனங்களில் போலீசார் அதிரடி சோதனை,மோப்பநாய் உதவியுடன் அனைத்து பார்சல்களையும் சோதனை செய்ததால் பரபரப்பு
புதுச்சேரியில் போதை பொருள் நடமாட்டத்தை தடுப்பதற்காக ஆபரேஷன் திரிசூல் என்ற அமைப்பை தொடங்கி புதுச்சேரி போலீசார் பேருந்து நிலையம் ரயில்வே நிலையம் மற்றும் பல்வேறு கடைகளில் சோதனைகளை மேற்கொண்டு அவ்வப்போது கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
மேலும் போதையில் இருந்து இளைஞர்கள் விடுபட வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளையும் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள கொரியர் நிறுவனத்தின் மூலம் புதுச்சேரியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கொண்டு வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனை அடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் தலைமையில் நெல்லி தோப்பு, 45 -அடி சாலை, வெங்கட்டா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கொரியர் நிறுவனத்தில் மோப்பநாய் பைரவா உதவியுடன் அதிரடி சோதனை ஈடுபட்டனர்.
அப்போது வாடிக்கையாளர்கள் பதிவு செய்த பார்சல்களையும் டெலிவரி செய்ய வைக்கப்பட்டிருந்த பார்சல் களையும் ஒவ்வொன்றாக போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
மேலும் சந்தேகத்திற்கிடமாக பார்சல்கள் வந்தால் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் போலீசார் கொரிய நிறுவனத்தினரை அறிவுறுத்தினர்.
மேலும் கொரியர் நிறுவனத்தின் மூலம் புதுச்சேரியில் கஞ்சா கொண்டுவரப்படுவதாக வந்த தகவல் அடுத்து கொரியர் நிறுவனங்களில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டது புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.