in

மயிலாடுதுறைல் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதி விவசாயிகள் சாலை மறியல்


Watch – YouTube Click

மயிலாடுதுறைல் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதி விவசாயிகள் சாலை மறியல்

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்பட்ட குறுவை சாகுபடி பணிகள் தீவிரம், தமிழக அரசின் மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்காமல், குறைந்த அழுத்தம் மின்சாரம் காரணமாகவும் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதி, கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு 93 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை குத்தாலம் தரங்கம்பாடி சீர்காழி ஆகிய நான்கு தாலுகாக்களில் சுமார் 25 ஆயிரம் மின்னோட்டங்களை பயன்படுத்தி நிலத்தடி நீர் மூலம் முன்பட்ட குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் துவக்கி உள்ளனர்.

நிலத்தடி நீர் மூலம் வயலுக்கு நீர் பாய்ச்சி சேடை வைத்து, உழவு செய்தல் அண்டை வெட்டுதல் நிலத்தை சமன்படுத்துதல், நாற்றங்கால் வைத்தல் ஆகிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக தினமும் 12 மணி நேரம் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கூறி வந்த நிலையில் பகலில் ஆறு மணி நேரமும் இரவில் ஆறு மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. ஆனால் குறிப்பிட்டபடி மின்சாரம் வழங்கப்படாத நிலையில் விட்டு விட்டு மின்சாரம் வழங்கப்படுகிறது.

அந்த மின்சாரமும் 240 ஓல்ட்டுக்கு பதிலாக 100 முதல் 110 ஓல்ட் மின்சாரம் மட்டுமே குறைந்த மின்னழுத்தத்தில் விநியோகம் செய்யப்படுகிறது இதனால் மின் மோட்டார்கள் இயங்கவில்லை. இதன் காரணமாக தொடர்ந்து வயலுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் பாதி தண்ணீர் பாய்ந்த நிலையில் மீதி வயல்கள் காய்ந்த நிலையில் உள்ளது.

நாற்றங்கால்கள் கருகுவதாகவும் கடும் வெயில் காரணமாக தண்ணீர் ஆவி ஆகி விடுவதால் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதாகவும், 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்குவது உடன் சரியான அழுத்தத்தில் மின்சாரத்தை விநியோகிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்திக்க வேண்டும் என்றும் வேதனை தெரிவித்துள்ளனர்.

கருகும் பயிர்களுக்கு தண்ணீர் விடுவதற்காக மும்முனை மின்சாரம் 12 மணி நேரம் வழங்க வலியுறுத்தி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஏராளமான விவசாயிகள் கால் டாக்ஸ் ரோடு சந்திப்பில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வருவாய்த்துறையினர் மற்றும் மின்வாரியத்தினர் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி 12 மணி நேரம் மின்சாரம் வழங்குவதாக உத்தரவாதம் அளித்தனர் இதனை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனர் .


Watch – YouTube Click

What do you think?

வண்ணார் சமுதாயத்தின் பெயரை ராஜகுலத்தோர் என பெயர் மாற்றம் வேண்டும்

ஆதீனம் மிரட்டல் வழக்கில் மும்பை சென்று கைது செய்த காவல்துறை