in

இறந்தாலும் வாழ்ந்தாலும் நின் பெயர் சொல்லும் இந்த வையம்


Watch – YouTube Click

இறந்தாலும் வாழ்ந்தாலும் நின் பெயர் சொல்லும் இந்த வையம்

 

இறந்தாலும் வாழ்ந்தாலும் பெயர் சொல்ல வேண்டும்…மனோபாலாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம்.

இயக்குனர் தயாரிப்பாளர் என்று பல முகம் கொண்ட நடிகர் மனோபாலாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

கமலஹாசனின் பரிந்துரையால் 1975..ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜாவிடம் புதிய வார்ப்புகள் என்ற படத்தில் உதவி இயக்குனராக இணைந்தவர் மனோபாலா.

இவரை உதவி இயக்குனராக சேர்த்துக் கொண்டார் பாரதிராஜா முதல் படத்திலேயே இவரின் திறமையை பார்த்து வியந்து போன பாரதிராஜா தனது ஆஸ்தானா இயக்குனராக்கி விட்டார்.

மனோபாலா டிக் டிக், கல்லுக்குள் ஈரம் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

1982 ஆம் ஆண்டு கங்கைப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

அதன் பிறகு இருபதுக்கும் மேற்பட்ட தமிழ் படங்களை இயக்கியவர் இந்தி கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இயக்குனராக பயணித்தார்.

இயக்கத்திற்கு மட்டும் அல்ல நடிப்பிலும் கலக்கியவர் இயக்குனர் பாலா இவர் நடித்த சிறுசிறு கதாபாத்திரங்கள் அனைத்துமே பெரும் வரவேற்பு பெறவே அதன் பிறகு முழு நேர நடிகராகவே மாறிவிட்டார் மனோபாலா.

ஏராளமான நடிகர்களுடன் இவர் நடித்த அனைத்து படங்களுமே ஹிட். எச்.

35 வருட சினிமா வாழ்கையில் 900 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். வினோத் போன்ற பல இயக்குனர்களையும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் படுத்தியவர்.

ஒரு சில தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார். 2022 இல் Cooku With Comali இல் போட்டியாளர்களில் ஒருவராக தோன்றியவர்.

மனோபாலா வேஸ்ட் பேப்பர் என்ற Youtube சேனல் முலம் சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்து வெளியிட்டார்.

இவர் நடிப்பை தாண்டி சினிமா துறையில் ஏதாவது பிரச்சனை என்றால் பாலமாக இருந்து பிரச்சனையே சுமுகமாக தீர்த்து வைப்பவர் யாரிடமும் ஈகோ பார்க்காமல் அனைவரிடமும் நேசத்துடன் பழகுபவர்.

கடந்த ஆண்டு கல்லீரல் பிரச்சினை காரணமாக மேற்கொண்ட சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். எதிர்பார்க்காத இவரின் மரணம் சினிமா துறையே சோகத்தில் ஆழ்த்தியது. இன்று இவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

“மரணத்தை வென்றவர் யாரும் இல்லை… மனிதனை கண்டு அஞ்சியதும் இல்லை மரணம். ஒரு நல்லவன் இறந்தால் அது அவருக்கு கிடைக்கும் ஓய்வு..”


Watch – YouTube Click

What do you think?

காரியாபட்டி அருகே கல் குவாரி விபத்து, மத்திய வெடிபொருள்குழு ஆய்வு

என் முடிவில் நான் உறுதியா இருக்கிறேன் அடம் பிடிக்கும் அக்ஷய் கமல்