வாக்காளர் அடையாள அட்டை மறந்து விட்டு வந்த முன்னாள் பிரதமர்
பிரிட்டனில் மேயர் உள்பட உள்ளாட்சி பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.
முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் சவுத் ஆக்ஸ்போர்ட் ஷயர் வாக்குச்சாவடியில் வாக்களிக்க ஆர்வமாக வந்தார்.
அப்போதுதான் அவர் தனது வாக்காளர் அடையாள அட்டையை வீட்டிலேயே மறந்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது.
இதனால் அவர் மீண்டும் வீட்டுக்கு சென்று வாக்காளர் அடையாள அட்டையை எடுத்து விட்டு தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படத்தை இணைக்கும் திட்டத்தை அவர் பிரதமராக இருந்த போது தான் அறிமுகப்படுத்தினார்.
தற்போது அதே அடையாள அட்டை இல்லாமல் அவர் மீண்டும் எனது வீட்டுக்கு சென்று எடுத்து வந்து வாக்களிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.