Siva கார்த்திகேயன் மற்றும் யாஷ் நடிக்கும் ரஜினிகாந்த பயோபிக்..
தமிழ் சினிமாவில் சமீப காலமாக அரசியல் தலைவர்கள், நடிகர்களின் வாழ்க்கை வரலாறுகள் படமாக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இளையராஜா பயோபிக் படத்தில் தனுஷ் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தற்பொழுது இன்னொரு மாபெரும் நடிகரின் வாழ்க்கையும் படமாக்கும் முயற்சியில் பிரபல ஹிந்தி இயக்குனரும் தயாரிப்பாளருமான Sajid Nadiadwala இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சில மாதங்களுக்கு முன் ரஜினியை சந்தித்த சஜித் அவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரமானது தற்பொழுது எழுதும் பணிகள் நடந்து வருவதாகவும் அப்படத்தில் நடிக்க நடிகர் நடிகைகளின் தேர்வுகளும் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என்று இணையத்தில் தகவல் வெளியிட பட்டது.
ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால் அந்த கதாபாத்திரத்திற்கு சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் கன்னட நடிகர் யாஷ் பொருத்தமாக இருப்பார்கள் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
தனுஷும் ரஜினியின் பியோபிக்…இல் நடிக்க ஆர்வம் தெரிவித்து இருப்பதாக கூறியிருந்தார். 48 வருடங்களாக சினிமா துறையில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை 169 படங்களில் நடித்துள்ளார்.
ரஜினி தற்பொழுது வேட்டையன் படத்தை முடித்துவிட்டு கூலி படத்தில் நடித்து வருகிறார்.