பரதநாட்டிய கலைஞரான பிரியாலயா நடிக்கும்?
ஆனந்த நாராயணன் டைரக்ட் செய்யும் ‘இங்கு நான் தான் கிங்’ என்ற படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடன கலைஞரான பிரியாலயா கதாநாயகியாக நடித்து உள்ளார்.
இப்படம் குறித்து பிரியாலயா கூறியதாவது நான் சேலத்தை சேர்ந்த பெண் பரதநாட்டியம் கற்றுக்கொண்டு பல மேடைகளில் நடனம் ஆடி இருக்கின்றேன்.
சமூக வலைத்தளங்களில் எனது நடன வீடியோக்களை பதிவிட்டதை பார்த்து இயக்குனர் இந்த படத்தில் என்னை கதாநாயகியாக தேர்வு செய்திருக்கிறார்.
நான் நடனப்பள்ளியும் நடத்துகிறேன். சந்தானம் மிகவும் எளிமையான திறமையான நடிகர் நகைச்சுவையாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கலாம்.
திருமண தகவல் மையம் நடத்தும் சந்தானத்திற்கும் எனக்கும் நடக்கும் பிரச்சனையும் காதலையும் பற்றி தான் இந்தபடம். கதாநாயகிகளுக்கு நிச்சயம் நடனம் தெரிந்திருக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து என்று பிரியாலயா கூறினார்.