அப்பர் சுவாமிகள் முக்தி அடைந்த நாளை பாடலீஸ்வரர் திருக்கோவிலில்
வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது
மகேந்திர பல்லவர் காலத்தில் அப்பர் சுவாமிகள் சிவனே சிவாய நமஹ என்ற சிவனை நினைத்து வழிபட்டதால் அவரை கடலில் இரும்பு சங்கிலியால் கட்டி வீசி விடுகின்றனர் அப்பொழுதும்அப்பர் சுவாமிகள் சிவன் மீது கொண்ட பக்தியின் மூலம் சிவனையே நினைத்து வரும்போது இரும்பு சங்கிலியால் கட்டப்பட்ட அப்பர் சுவாமிகள் தெப்பமாக மாறி கடலூர் புதுவண்டி பாளையம் பகுதியில் உள்ள கரை
ஏறிவிட்ட குப்பம் என்ற பகுதியில் அப்பர் சுவாமிகள் ஒதுங்கியதாக புராண வரலாறு கூறுகிறது
இதன் காரணமாக பல்லாண்டுகளாக அப்பர் சுவாமிகள் கரையேறிய அந்த இடத்திலும் வழிபாடு நிகழ்ச்சி தொடர்ந்து நடை பெற்று வருகிறது
அப்பர் சுவாமிகள் முக்தி அடையும் போது ஈஸ்வரன் காட்சி கொடுத்து அவர்ஜோதியாக கலந்ததாக வரலாறு கூறுகிறது அப்பர் சுவாமிகள் கரையேறிவிட்ட இந்த நிகழ்ச்சி தொடர்ந்து ஸ்ரீ பாடலீஸ்வரர் திருக்கோவிலில் அப்பர் சுவாமிகள் மற்றும்.மரகத சந்திரசேகரன் சுவாமிகள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிவதீர்த்த குளத்தில் அப்பர் சுவாமிகள் காட்சி கொடுத்து அந்த நிகழ்ச்சியை வெகு விமர்சையாக பாடலீஸ்வரர் கோவிலில் உள்ள ஆன்மீக குழுவினர் செய்தனர் சுவாமிகள் சந்திரசேகரன் மனோன்மணி சுவாமிகள் உற்சவ
மூர்த்தியாகவும் அப்பர் சுவாமிகள் எதிரிலும் காட்சி கொடுத்தனர்
சதய நட்சத்திரத்தில் அப்பர் சுவாமிகள் ஜோதியாக கலந்து மோட்சம் அடைந்ததாக தல வரலாறு கூறுகிறது இந்நிகழ்ச்சி நேற்று பாடலீஸ்வரர் திருக்கோவிலில் வெகுசிறப்பாக நடைபெற்றது
வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது அப்பர் சுவாமிகள் முக்தி அடைந்த இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்