in

புதுச்சேரி…60% பேருக்கு ஆஸ்துமா நோய் பற்றி தெரியவில்லை.. மருத்துவர்கள் கவலை…


Watch – YouTube Click

புதுச்சேரி…60% பேருக்கு ஆஸ்துமா நோய் பற்றி தெரியவில்லை.. மருத்துவர்கள் கவலை…

இன்று உலக ஆஸ்துமா தினம். இதனையொட்டி புதுச்சேரியில் பிம்ஸ் மருத்துவமனை சார்பில் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி கடற்கரை சாலையில் துவங்கி டுப்லக் சிலை சோனா பாளையம் ரயில் நிலையம் வழியாக பொட்டானிக்கல் கார்டனை சென்றடைந்தது.

இதனை காவல்துறை அதிகாரி வம்சீதர் ரெட்டி துவக்கி வைத்தார்.பிம்ஸ் முதல்வர் அனில் பூர்த்தி முன்னிலை வகித்தார். பேரணியில் பங்கேற்ற மாணவர்களும் மருத்துவர்களும் ஆஸ்துமா விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

ஆஸ்துமா குறித்த பல சந்தேகங்கள் பெருமளவில் உள்ளது அதனை தீர்க்க வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மாசுபடுத்தல், தூசு போன்றவை ஆஸ்துமாவிற்கு காரணம். சிலருக்கு செண்ட், அகர்பத்தியால் கூட மூச்சுதிணறல் வரும்.

ஏசி, ஷோபா செட் போன்றவற்றை சுத்தமாக வைத்திருக்கவில்லை என்றாலும் ஆஸ்துமா வரும். குளிர்காலங்களில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு சளி, மூச்சுதிணறல் அதிகமாக இருக்கும்.

இதற்கு இன்ஹேலர் எடுப்பது மிக மிக நல்லது. எடுத்தால்தான் எதிர்காலத்தில் நுரையீரல் சுருங்காது.எந்த பக்கவிளைவும் இருக்காது. கோடைக்காலத்தில் தூசு அதிகமாக பரவும். தூசு தான் ஆஸ்துமாவிற்கு முக்கிய காரணம். முககவசம் அணிய வேண்டும். முதியவர்கள் உரிய தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர்..

300க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றதாகவும் மருத்துவமனைக்குள் இருந்து பல விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மக்களிடம் அதிகம் போய் சேருவதில்லை.

இது போன்ற பொதுவெளியில் நடத்தப்படும் விழிப்புணர்வு காரணமாக ஆஸ்துமா நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என மருத்துவர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர். 60% பேர் ஆஸ்துமா நோய் பற்றி தெரியாமல் இருப்பதாகவும் ஆஸ்துமா நோயை வருவதற்கு முன்னே தடுக்க முடியும் என்றும் செவிலியர் மலர்விழி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் துணை முதல்வர் டாக்டர். ஸ்டாலின், இளங்கலை மருத்துவத்துறை டீன் டாக்டர் நிஷாந்த் சுவாச மருத்துவத்துறை இணை பேராசிரியர் அந்தோனியஸ் மரிய செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் கடைகளை வைத்தால் 500 ரூபாய் அபராதம்

சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்