மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி தர்ணா போராட்டம்
நாகை மாவட்டம் நாகூர் அருகே பனங்குடியில் மத்திய அரசின் பொதுப்பணித்துறை நிறுவனமான சிபிசிஎல் ஆலை உள்ளது.
ஆலை ரூ.31 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் ஆலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதற்காக 620 ஏக்கர் விவசாய நிலம் பனங்குடி, கோபுராஜபுரம், முட்டம், நரிமணம் ஆகிய பகுதிகளில் இருந்து கையகப்படுத்தப்பட்டுள்ளது. கையகப்படுத்திய நிலத்திற்கு R&R (மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டு தொகை ) உரிய இழப்பீடு வழங்காமல் சிபிசிஎல் நிறுவனம் காலம் தாழ்த்தி வருவதால் பாதிக்கப்பட்ட சாகுபடிதாரர்கள், விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் சேர்ந்த விவசாயிகள் சிபிசிஎல் நிறுவனத்தையும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டு கடந்த 1ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று 7வது நாளாக உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் பிள்ளைபணக்குடி கிராமத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் விவசாயக் கூலி தொழிலாளர்கள் கையில் சட்டி, ஓடு ஏந்தி பிச்சை எடுத்து நூதன முறையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று நாகை மாவட்ட ஆட்சியர் பேச்சு வார்த்தைக்கு அழைப்பதாக கூறி தங்களை அழைத்துச் சென்று ஏமாற்றியதால் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளிநடப்பு செய்து இன்று போராட்டம் தொடர்ந்து வருவதாகவும் தங்களுக்கு உரிய தீர்வு ஏற்படுத்தாமல் அளக்களித்து வருவதாகவும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.