மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்தது
மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்தது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த பருவத்தில் வடகிழக்கு பருவ மழை சரிவர பெய்யாத நிலையில் மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நீடித்து வருகிறது.
நீர்நிலைகள் பெரும்பாலும் வறண்டு உள்ள நிலையில் 5 மாதத்திற்கு மேலாக மழை பெய்யவில்லை தற்போது நிலவும் கடும் கோடை வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த காற்று வீசியது தொடர்ந்து கொள்ளிடம் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக கனமழை கொட்டி தீர்த்தது.
இதேபோல் குத்தாலம் பகுதியில் பரவலாக மழை பெய்தது இதன் காரணமாக மாவட்டத்தின் ஒரு பகுதியில் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது அதே நேரம் மயிலாடுதுறை செம்பனார்கோயில் மங்கைநல்லூர் தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யாத காரணத்தால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.