மூடப்பட்டிருந்த முத்துமாரியம்மன் கோவில் கிராம மக்கள் முன்னிலையில் தாசில்தார் திறந்து வைத்தார்
புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் மீனவ கிராமத்தில் ஒரு வருட காலமாக மூடப்பட்டிருந்த முத்து மாரியம்மன் கோவில் காவல்துறை மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் தாசில்தார் திறந்து வைத்தார்
தேங்காய், பூசணிக்காய் உடைத்து, சூடம் ஏற்றி பூஜை செய்து கிராம மக்கள் வழிபாடு
புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் மீனவ கிராமத்தில் அருள்மிகு முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 2 ஆண்டுக்கு ஒரு முறை பஞ்சாயத்து நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது வழக்கம்.கடந்த 2021-ம் ஆண்டு முன்பு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2023 ஆம் ஆண்டு பதவிக்காலம் முடிந்தவுடன் அவர்கள் பதவி விலகாமல் தொடர்ந்து 25- ம் ஆண்டு வரை தாங்கள் தான் பதிவில் இருப்போம் என்று தெரிவித்தனர். இதற்கு கிராம மக்கள் ஒரு தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் இரு தரப்பினரும் கையில் கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு கடுமையாக தாக்கிக் கொண்டனர் இந்த மோதல் காரணமாக புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் காவல் துறையும் தலையிட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் முத்து மாரியம்மன் கோவிலை மூடி சீல் வைத்தது.
இதனைத் தொடர்ந்து இந்த கோவிலை திறப்பதற்காக கிராம மக்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்தனர் ஆனால் காவல்துறை இதற்கு அனுமதி மறுத்து வந்தது…
இந்த நிலையில் ஊர் பொதுமக்கள் பஞ்சாயத்தார் மற்றும் மீனவ கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் கோயிலை திறக்க வேண்டும் என்று கோரிக்கையை மனுவாக அளித்திருந்தனர் இதன் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுத்து கோயில் திறப்பதற்கான நடவடிக்கை எடுத்தார்.அதன்படி இன்று காவல்துறை உதவியுடன் தாசில்தார் பிரதீவ் கோவிலை திறந்து வைத்தார்.இதனை தொடர்ந்து ஊர் பொதுமக்கள்,கிராம பஞ்சாயத்து அனைவரும் கோவிலுள்ளே சென்று சூடம் ஏற்றி தேங்காய் பூசணிக்காய் உடைத்து பூஜை பூஜை செய்து வழிபட்டனர். மேலும் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் கோவிலுக்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் வரை மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் கோவில் இருக்கும் என்று தெரிவித்தனர்.
இது குறித்து அப்பகுதி பெண்கள் கூறும் போது.கடந்த ஓராண்டுகளாக கோவில் மூடி இருந்தது தற்போது போலீசார் மற்றும் வருவாய் துறையினர் திறந்து நடவடிக்கை எடுத்துள்ளனர் இது மிகவும் சந்தோஷமாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.