in

புதுச்சேரி லாஸ்பேட்டை சாலைகளில் வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள்


Watch – YouTube Click

புதுச்சேரி.. லாஸ்பேட்டை சாலைகளில் வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள்..

புதுச்சேரியில் கிராமப்புறங்களில் மழை பெய்தது.ஆனால் நகர பகுதிகளில் மழை பெய்யவில்லை. நகர பகுதியை ஒட்டியுள்ள லாஸ்பேட்டையில் லேசான மழை பெய்தது. காற்று காரணமாக மரங்களில் இருந்த கிளைகள், பூக்கள் விழுந்தது. லாஸ்பேட்டையில் கல்லூரி சாலை, விமான நிலைய சாலையில் அதிகளவில் மரங்கள் உள்ளது.

இந்த மரங்களில் ரெயின் டிரீ எனப்படும் தூங்கு மூஞ்ஞி மரம் உள்ளது. மரத்திலிருந்த பூக்கள், காய், பழம் ஆகியவை காற்றில் சாலையில் விழுந்தது. இதன் மீது கார், லாரி வாகனங்கள் சென்றபோது காய், பழம், பூ நசுங்கி பிசின்போல இருந்தது. சாலையில் தண்ணீரில் பரவியது.

இது வழுக்கும் தன்மை கொண்டதாலும், அந்த சாலை சரிவாக இருந்ததாலும், அந்த வழியே வந்த இருசக்கர வாகனங்கள் பிசினில் வழுக்கியது. இதனால் இந்த 2 சாலைகளிலும் இருசக்கர வாகனங்களில் வந்த 50க்கும் மேற்பட்டோர் பிரேக் பிடிக்காமல் வழுக்கி விழுந்தனர்.

இதனையடுத்து அந்த பகுதியினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் வாகனத்தில் வந்து சாலையில் தண்ணீரை பீய்ச்சி அடித்துஅதை அப்புறப்படுத்தினர். சிறிதுநேரம் அந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்ல வேண்டாம் என தீயணைப்பு துறையினர் கேட்டுக் கொண்டனர்.காயமடைந்தவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று திரும்பினர்.


Watch – YouTube Click

What do you think?

மூடப்பட்டிருந்த முத்துமாரியம்மன் கோவில் கிராம மக்கள் முன்னிலையில் தாசில்தார் திறந்து வைத்தார்

சிம்புவை நம்ப வைத்து மோசம் பண்ணிய கமல்…