போதுமான குடோன் இல்லை – விவசாயிகள் குற்றச்சாட்டு
போளூர் பகுதியில் தொடர் கனமழை காரணமாக வேளாண்மை விற்பனை கூடத்தில் விவசாயிகள் விற்பனைக்காக வைத்திருந்த 50,000 நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து நாசம்.
நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க போதுமான குடோன் இல்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் இன்று விடியற்காலை திடீரென கோடை மழை கொட்டி தீர்த்தது.
போளூர் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக போளூர் வேளாண்மை விற்பனை கூடம் மற்றும் பால்வார்த்துவென்றான் வேளாண்மை விற்பனை கூடத்தில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு
குடோனில் போதுமான இட வசதிகள் இல்லாததால் வேளாண்மை விற்பனை மையத்தில் வெளியே அடுக்கி வைத்திருந்த 50,000 மேற்பட்ட நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து நாசமாகியது.
விவசாயிகளின் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க வேளாண்மை விற்பனை மையத்தில் போதுமான பாதுகாப்பான குடோன்கள் இல்லாததால் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகள் அனைத்தும் நனைந்து விட்டதால் நல்ல தரமான முறையில் விவசாயிகள் பாதுகாத்து நல்ல விலைக்கு விற்கும் என எதிர்பார்த்து காத்துக் கிடந்த விவசாயிகளுக்கு
தற்போது மழையினால் நனைந்து விட்டதால் நெல்களை வியாபாரிகள் குறைந்த அளவில் மிக குறைந்த விலைக்கு வாங்குகிறார்கள் இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது
விவசாயிகள் தங்களுடைய விலை பொருட்களை பாதுகாப்பாக இயற்கை போன்ற சீற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள போதுமான குடோன் வசதிகள் வேளாண் விற்பனை மையத்தில் இல்லாததால் விவசாயிகள் வருடம் முழுவதும் பாதுகாத்து வரும் இந்த விவசாய பொருட்களை விற்கும் நேரத்தில் பெரும் நஷ்டம் அடைந்து வருவதாகவும்
போளூர் பகுதியில் போதுமான வேளாண்மை குடோன்கள் அரசு அமைத்து தர வேண்டும் என அந்த பகுதியிலுள்ள விவசாயிகள் வேதனையுடன் தங்களுடைய குமரல்களை கொட்டி தீர்த்து வருகின்றனர்.