பூட்டியிருந்த வீட்டில் 110 சவரன் தங்க நகைகள் கொள்ளை
நாகை அருகே நாகூரில் பூட்டியிருந்த வீட்டில் 110 சவரன் தங்க நகைகள் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் ; திருடிய களைப்பில் வீட்டின் பின்புறம் சாவகாசமாக படுத்து உறங்கி சென்ற நிலையில் போலீசார் கைரேகை மற்றும் மோப்ப நாய் கொண்டு தீவிர விசாரணை:
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் நூல்கடைத் தெருவைச் சேர்ந்தவர் தாவூத் பாத்திமா நாச்சியார் இவர் தனது தாயோடு தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் . இவர் கடந்த 3 ம் தேதி நாகூர் புதுமனைத் தெருவில் உள்ள அவரது தம்பி அப்துல் வாஹித் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று அவரது வீட்டிற்கு அவரது மற்றொரு தம்பி இக்பால் அலி என்பவர் வந்தவர் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு தனது அக்காவிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக அவர்கள் வந்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது தனித் தனி அறைகளில் இருந்த 5 க்கும் மேற்பட்ட பீரோக்களை உடைக்க பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பீரோவில் இருந்த 110 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளது தெரிய வந்தது . இதனையடுத்து நாகூர் நகர காவல் நிலையதில் புகார் அளித்த நிலையில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் கைரேகை நிபுனர்கள் மற்றும் மோப்ப நாய் கொண்டு தீவிர சோதனை செய்தனர். அப்போது வீட்டில் பின்பக்கம் உள்ள சந்து பகுதியில் துணிகளை கொண்டு திருடர்கள் படுத்து உறங்கி சென்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து அப்பகுதிகளில் உள்ள கடை மற்றும் வீடுகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். நாகை மாவட்டத்தில் நாகூர் முக்கிய சுற்றுலாத் தளமாக இருப்பதால் பல்வேறு மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வந்து செல்வதால் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். நாகூரில் பூட்டியிருந்த வீட்டில் பீரோவை உடைத்து தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.