in

பாதிக்கப்பட்ட கிராம விவசாயிகள் 8வது நாளாக உண்ணாவிரத போராட்டம்


Watch – YouTube Click

நாகை அருகே பணங்குடியில் சிபிசிஎல் நிறுவன விரிவாக்க பணிகளுக்கு நில எடுப்பில் உரிய நிவாரணத் தொகை (R&R) வழங்காதது கண்டித்து பாதிக்கப்பட்ட கிராம விவசாயிகள் 8வது நாளாக உண்ணாவிரத போராட்டம்

இன்று நெற்றியில் ரூபாய் காயின் வைத்து தாடையில் வெள்ளை துணி கட்டி சடலமாக தங்களை காட்டி ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்: தமிழக முழுவதும் அனைத்து விவசாய சங்கங்களையும் திரட்டி பெருமளவில் போராட்டம் நடைபெறும் விவசாயி பேட்டி

நாகை மாவட்டம் நாகூர் அருகே பனங்குடியில் மத்திய அரசின் பொதுப்பணித்துறை நிறுவனமான சிபிசிஎல் ஆலை உள்ளது. ஆலை ரூ.31 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் ஆலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதற்காக 620 ஏக்கர் விவசாய நிலம் பனங்குடி, கோபுராஜபுரம், முட்டம், நரிமணம் ஆகிய பகுதிகளில் இருந்து கையகப்படுத்தப்பட்டுள்ளது. கையகப்படுத்திய நிலத்திற்கு R&R (மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டு தொகை )
உரிய இழப்பீடு வழங்காமல் சிபிசிஎல் நிறுவனம் காலம் தாழ்த்தி வருவதால் பாதிக்கப்பட்ட சாகுபடிதாரர்கள், விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் சேர்ந்த விவசாயிகள் சிபிசிஎல் நிறுவனத்தையும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கடந்த 1ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் தொடங்கினர். இன்று 8வது நாளாக உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து வருகிறது.இந்த நிலையில் பிள்ளைபணக்குடி கிராமத்தில் நெற்றியில் ஒரு ரூபாய் காயின் வைத்து தாடையில் வெள்ளை துணி கட்டி சடலமாக தங்களை காட்டி துக்க வீடு போல் ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று மாவட்ட ஆட்சியர் போராட்டக்காரர்களிடம் R&R இழப்பீட்டுத் தொகை இம்மாதம் 28ஆம் தேதி இறுதி செய்யப்பட்டு விரைவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும், சிபிசிஎல் நிறுவன விரிவாக்க பணி செய்ய விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் என ஆட்சியர் அங்கு விவசாயிகளிடம் தெரிவித்தார். விவசாயிகள் மறுப்பு தெரிவித்து மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீட்டுத் தொகை கொடுத்த பிறகு சிபிசிஎல் பணிகளை தொடங்க வேண்டும் கிராம விவசாயிகள் உறுதி தெரிவித்து போராட்டத்தை தீவிர படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் எட்டாவது நாளாக நடைபெறும் போராட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டுவதால் தமிழக முழுவதும் உள்ள விவசாய சங்கங்களை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

பூட்டியிருந்த வீட்டில் 110 சவரன் தங்க நகைகள் கொள்ளை

பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் போக்குவரத்து காவல்துறையினர் பறிமுதல்