விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்.. கருப்பு
எம்.ஜி.ஆர் …இன்னு பட்டம் கொடுத்த விவசாயிகள்
சினிமா துறையில் இருக்கும் பல நடிகர்கள் சம்பாதிக்கும் கோடிகளை பல கோடிகளாக மாற்றலாம் என்று நினைக்கும் நடிகர்களுக்கு மத்தியில் சம்பாதிக்கும் பணத்தில் தன்னால் இயன்ற உதவிகளை பலருக்கு செய்து வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ் சென்ற மாதம் கணவனை இழந்த பெண்ணுக்கு கே பி ஒய் பாலா உடன் சேர்ந்து ஆட்டோ வாங்கி கொடுத்த லாரன்ஸ் தற்பொழுது கோவையில் விவசாய கிராமத்திற்கு ட்ராக்டர் வழங்கியுள்ளார் தனது அறக்கட்டளை மூலம் பல ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார் குறிப்பாக ஊனமுற்றவர்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் யாரிடமும் உதவி எதிர்பார்க்காமல் தன் சொந்த பனத்தில் உதவும் நடிகர் லாரன்ஸ் தற்பொழுது கோவை தொண்டாமுத்தூர் பகுதி தேவராயபுரம் கிராமத்திற்கு சென்று விவசாயிகளை சந்தித்து டிராக்டர் வழங்கினார். அவருக்கு மேல தாலத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்க பட்டது.
அவர்களுடன் பேசியவர் நான் செய்யும் இந்த சேவை மூலம் அனைவருக்கும் சேவை செய்யும் எண்ணம் தோன்றினால் போதும் என்னை எம்.ஜி.ஆருடன் சேர்த்து கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லி கோர்த்துவிட்டு சர்ச்சையாகி விடாதீர்கள் நான் செல்லும் இடத்தில் பல பேர் என்னை அன்னை தெரசா, எம்ஜிஆர் என்று அழைகிறார்கள் .இந்த வார்த்தைகளை என் இதயத்தில் நான் வைத்துக் கொள்வேன் தலையில் வைத்துக் கொள்ள மாட்டேன் விவசாயம் வளர வேண்டும் விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் நான் டிராக்டரை வழங்கி உள்ளேன் மேலும் என்னுடன் சேவை செய்ய நினைப்பவர்கள் என் அறக்கட்டலையை தொடர்பு கொண்டு எங்களுடன் இணைந்து சேவை செய்யலாம் என்று கேட்டுள்ளார்