in

150 வருடம் வாழ்வேன் …ன்னு சொல்லி … பத்திரிகையாளர்களை சிரிக்க வைத்த சரத்குமார்

150 வருடம் வாழ்வேன் …ன்னு சொல்லி … பத்திரிகையாளர்களை சிரிக்க வைத்த சரத்குமார்

பல கமர்சியல் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா, நடிக்கும் ஹிட் லிஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார் பேசியது அனைவரையும் யோசிக்க வைத்ததா என்று கேட்பதை விட சிரிக்க வைத்தது என்ரே சொல்லலாம்.

கே எஸ் ரவிக்குமார் தயாரிப்பில் இயக்குனர்கள் சூரியக்கதிர் மற்றும் கே. கார்த்திகேயன் இருவரும் இணைந்து ஹிட் லிஸ்ட்’ படத்தை இயக்கியுள்ளனர்.

செந்தில், சரத்குமார், கே எஸ் ரவிக்குமார், சமுத்திரகனி, கௌதம் மேனன், சித்தாரா, ரெடின்கிங்ஸ், மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் சரத்குமார் கலைஞர் முன்னிலையில் சூரியவம்சம் படத்தின் வெற்றி விழாவை இங்கு கொண்டாடினோம் அந்த இடத்தில் ஹிட் லிஸ்ட்’ படத்தின் ஆடியோ லான்ச் விழா நடப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் உடற்பயிற்சி செய்வது உண்டு. சூரியவம்சம் 2 பண்ணலாம் என்று எதிர்பார்த்தோம் ஆனால் சான்ஸ் சரியா அமையவில்லை சூரிய வம்சம் 2,3,4 பார்ட் வந்தாலும் கூட நான் 150 வயது வரை நடிப்பேன்.

நான் இப்படி பேசுறதை கேட்ட பத்திரிகையாளர்கள் 150 வயசு வரை வாழ்வார் என்று செய்தி போடுவார்கள். புரட்சித்தலைவர் மக்கள் தலைவி தற்போது இல்லை என்றாலும் மக்கள் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அப்படித்தான் நானும் வாழ்வேன் என்று கூறியிருக்கிறார். இவர் ஏற்கனவே ஒரு விழாவில் எல்லோரும் 300 ஆண்டுகள் எப்படி வாழ வேண்டும் என்ற சீக்ரெட் என்னிடம் இருக்கிறது.

என்னை முதல்வர் ஆக்கினால் நான் கூறுவேன் என்றார் தற்பொழுது இவர் 150 வருடம் நடிப்பேன் என்கிறார் எப்படி என்ற secret மட்டும் சொல்லவே மாட்டேன்கிறார்.

What do you think?

நடிகர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் குதிக்கும் அகரம் நடிகர்

தமிழக இருப்புப் பாதை காவல்துறை சார்பில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி