in

இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை

 

இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக குறுவை சாகுபடியில் சுமார் 5,000 ஏக்கரில் இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 94 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இதற்காக நாற்றங்கால்கள் அமைக்கப்பட்டு உழவு செய்து நடவு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

மயிலாடுதுறை தரங்கம்பாடி சீர்காழி குத்தாலம் ஆகிய நான்கு தாலுகாக்களில் சுமார் 12,000 ஏக்கரில் நடவு பணிகள் நிறைவடைந்த நிலையில் 1600 ஏக்கரில் நாற்றங்கால்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வயல்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கி உள்ளது இளம் நாற்றுகள் அரை அடிக்கும் குறைவான அளவு இருக்கும் என்பதால் பெரும்பாலான இடங்களில் இளம் நாற்றுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன தேங்கிய தண்ணீரை மழையை பொருட்படுத்தாமல் விவசாயிகள் வடிகால்களின் மூலம் வடிய வைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மழை தொடர்ந்தால் தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டு இளம் நாற்றுகள் அழுகி கரைந்து போய்விடும் இதனால் ஏக்கருக்கு இதுவரை 15 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள விவசாயிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடுமையான மின் தட்டு இருந்த போதும் நிலத்தடி நீரை பயன்படுத்தி குறுவை சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் தொடரும் மழை காரணமாக அச்சமடைந்துள்ளனர்.

அரசு உடனடியாக தண்ணீர் தேங்கியுள்ள வடிகால் வாய்க்கால்களை சீரமைத்து தண்ணீர் வடியவைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

டாப் ஹீரோ…வின் உறவினரை திருமணம் செய்ய போகும் லேகா வாஷிங்டன்

மூன்று வயது சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்