அனுமதியின்றி ரேக்ளா பந்தயத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
கன்னிவாடி அருகே கோவில் திருவிழாவில் எருது ஓட்டம் நடைபெற்றது 100-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலூகா கன்னிவாடியை அடுத்த கோனூரில் வேங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது.
அதனை தொடர்ந்து . மூன்று நாட்கள் பெரிய சாமி கும்பிட விழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான எருது விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த எருது விடும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஓட்டன்சத்திரம், அய்யலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட எருதுகள் கலந்து கொண்டன. பெருமாள் கோவிலில் இருந்து எருது களை பூஜை செய்து அவர்களின் பாரம்பரிய ஆட்டமான தேவராட்டத்துடன் ஊர்வலமாக அழைத்துச் சென்று எருது விடும் போட்டி நடைபெற்றது .
இதில் வெற்றி பெறும் எருதுகளுக்கு எலுமிச்சை மாலை, துண்டு ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது. திருவிழாவை காண கன்னிவாடி திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.