in

கொடைக்கானல் முக்கிய நிகழ்ச்சியான நாய் கண்காட்சி


Watch – YouTube Click

கொடைக்கானல் முக்கிய நிகழ்ச்சியான நாய் கண்காட்சி

 

கொடைக்கானல் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நாய் கண்காட்சி நடைபெற்றது பல விதமான நாய்கள் பங்கேற்பு

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் கடந்த 17ம் தேதி கோடை விழாவானது தொடங்கியது கோடை விழாவில் பல்வேறு துறைகள் சார்பாக பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது …

இந்த நிலையில் கோடை விழாவின் முக்கிய பங்காக கால்நடை மற்றும் பராமரிப்பு துறை சார்பாக நாய்கள் கண்காட்சி வருடம் தோறும் நடைபெறுவது வழக்கம் அதே போல் இந்த ஆண்டு 23 ஆவது வருட நாய் கண்காட்சி நடைபெற்றது …

இந்த நாய் கண்காட்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாய்கள் பங்கேற்றன குறிப்பாக சிட்சு, ஜெர்மன் ஷெப்பர்ட், ராஜபாளையம், சிப்பிப்பாறை, பக், பொமேரியன், பிட்புள், உள்ளிட்ட பல வகையான நாய்கள் பங்கேற்றன..

மொத்தமாக 13 வகைகளான நாய்கள் இந்த போட்டியில் பங்கேற்றன. 4 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டி நடைபெற்றது.. இந்தப் போட்டியில் நாய்களுக்கு பராமரிப்பு மற்றும் நடத்தைகளை பார்த்து பரிசுகள் வழங்கப்பட்டது..

மேலும் பரிசுகள் பெற்ற நாய்களுக்கு கால்நடை மற்றும் பராமரிப்பு துறை அதிகாரிகள் பரிசுகளை வழங்கினார்கள்.


Watch – YouTube Click

What do you think?

அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம்

அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி