in

திருச்சியில் மன்னர் முத்தரையர் அரசு சதய விழா – மாவட்ட ஆட்சியர், அமைச்சர் மரியாதை

திருச்சியில் மன்னர் முத்தரையர் அரசு சதய விழா – மாவட்ட ஆட்சியர், அமைச்சர் மரியாதை

திருச்சிராப்பள்ளி ஒத்தக்கடை பகுதியில் அமைந்துள்ள மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு 1349 வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன் இருவரும் முதலாவதாக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

அரசு சதய விழா மற்றும் குறிப்பிட்ட சமூகத்தினர் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செய்ய ஒத்தக்கடை பகுதிக்கு வருவார்கள்.
இதனால் அந்த சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு, மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பெரம்பலூர் பாராளுமன்ற திமுக வேட்பாளர் அருண் நேரு உள்ளிட்டோர் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

அதிமுக சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார் முன்னாள் அமைச்சர் சிவபதி, பரஞ்சோதி, வளர்மதி திருச்சி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் கருப்பையா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

What do you think?

ஐந்து தலை நாகத்தின் மடியில் படுத்து ஊஞ்சல் ஆடி அருள் பாலித்த முத்து மாரியம்மன்

பேருந்து நிலையத்தை வேறு இடத்தில் கட்ட வேண்டும் – டாக்டர் ராமதாஸ் பேட்டி