in

கண் துடைப்புக்காக கவரால் சீல் கலெக்டர் உத்தரவின் பேரில் நடத்த சோகம்


Watch – YouTube Click

கண் துடைப்புக்காக கவரால் சீல் கலெக்டர் உத்தரவின் பேரில் நடத்த சோகம்

 

திண்டிவனம் பகுதியில் கலெக்டர் உத்தரவின்பேரில் கண்துடைப்புக்காக பணி மேற்கொண்டு பிளாஸ்டிக் கவரால் சீல் வைத்த உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை பரபரப்பு

விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர்டாக்டர் பழனிஉத்தரவின் பேரில் திண்டிவனம்பகுதியில் புகையிலை பொருட்களால் தயாரிக்கப்பட்ட ஹான்ஸ், குட்கா பொருட்களை தடுக்கும் விதத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து துறையை சார்ந்தவர்கள் புகையிலை பொருட்களை கட்டுப்படுத்தும் விதமாகசெயல்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுகந்தன் அறிவுரையின்படி திண்டிவனம் பகுதியில்உணவு பாதுகாப்பு அலுவலர் கொளஞ்சி இரண்டு நாட்கள் போலீஸ் பாதுகாப்புடன் கடைகளில் சோதனை செய்தார்.

சோதனையின் போது 12 கடைகளுக்கு சீல் வைத்ததாகவும் இரண்டு கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தலா ஒவ்வொரு கடைக்கும் 25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளதாகவும் போட்டோ மட்டும் அனுப்பி தெரிவித்துள்ளார்.

சீல் வைக்கப்பட்ட சில கடைகள் உடனடியாக திறக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு கிலோ புகையிலை பொருட்கள்குறித்து எந்த வித போட்டோவும், வீடியோவும் அதிகாரியால் தரப்படவில்லை. மேலும் அலுவலர் கொளஞ்சி தெரிவித்தது போல் சீல் வைக்கப்பட்ட 12 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட உணவுகளில் சாம்பார் போன்ற திரவப் பொருட்களை கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளால் சில கடைகள் சீல் வைத்துள்ள அவலம் நிகழ்ந்துள்ளது.

மேலும் மாவட்ட கலெக்டர்உத்தரவின்பேரில் நடத்த பட்ட சோதனைகள் கண்துடைப்புக்காகதிண்டிவனம் பகுதியில்அதிகாரிகள் செய்துள்ளதாகவும் சீல் வைக்கப்பட்ட 12 கடைகளும் சாதாரண பங்க் கடைகள் எனவும் திண்டிவனத்தில் உள்ள பெரிய பங்க் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை.

திண்டிவனம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கவர்கள் தாராளமாக விற்பனை செய்வதும், வியாபாரிகளால் பயன்படுத்தப்பட்டும் வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டிய உணவு பாதுகாப்புதுறையினர்
ஒரு படி மேலாக சென்றுபிளாஸ்டிக் கவரால் சீல் செய்யும் அவலம் நடந்ததுள்ளது.

இதனால் திண்டிவனம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது அதிகாரிகள் தன்னுடைய பணியை சரிவர மேற்கொள்வதில்லை. மாம்பழம் சீசன் காலங்களில் மட்டும் போட்டோ ஒன்று கொடுத்து செய்தியை வரவழைத்து கோப்புக்காக மட்டும் வைத்துக் கொள்வதை வாடிக்கையாக செய்து வருவதாகவும் கண் துடைப்புக்காக பணி செய்வதை விடுத்து எப்போது தான் தங்களது பணி குறித்த முக்கியத்தும் அறிந்து அதிகாரிகள் பணி செய்வார்கள் என்று தெரியவில்லை.

பிளாஸ்டிக் கவரால் சீல் வைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.


Watch – YouTube Click

What do you think?

பிரிட்டனில் முன் கூட்டியே பொது தேர்தல்

குற்றாலம் போல் காட்சியளிக்கும் திண்டுக்கல் மலைக்கோட்டை விழுந்த மழைநீர்