in

ஒரே நாளில் பாபநாசம் அணை நீர்மட்டம் ஆறு அடி உயர்வு


Watch – YouTube Click

ஒரே நாளில் பாபநாசம் அணை நீர்மட்டம் ஆறு அடி உயர்வு

 

திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக பெய்யும் கனமழை பாபநாசம் அணைக்கு 3000 கனஅடி நீர்வரத்து ஒரே நாளில் பாபநாசம் அணை நீர்மட்டம் ஆறு அடி உயர்வு அணை பகுதியில் ஐந்து சென்டிமீட்டர் மழைப்பொழிவு விவசாயிகள் மகிழ்ச்சி.

சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பை அடுத்து நெல்லை மாவட்டம் முழுவதும் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இன்று காலை 7 மணி வரை நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலான மழை பதிவாகியுள்ளது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

மாவட்டத்தின் பிரதான மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள பாபநாசம் அணை பகுதியில் 50 மில்லிமீட்டர் அதாவது 5 cm மழை பொழிவு பதிவாகியுள்ளது இதனை அடுத்து பாபநாசம் மணிக்கு வினாடிக்கு 3000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையிலிருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக சுமார் 340 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது நெல்லை மாவட்டத்தின் மற்றொரு பிரதான அணையான மணிமுத்தாரின் அணையின் நீர்மட்டம் 85 அடியை தொட்டுள்ளது.

மணிமுத்தாறு பகுதியில் ஒன்பது புள்ளி எட்டு மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகி உள்ளது அனைத்து வினாடிக்கு 380 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த நிலையில் நிலை மாவட்டம் முழுவதும் பெய்யும் இந்த கோடை மழையினால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 2023 ஆம் வருடம் இதே மே மாதம் 24 ஆம் தேதி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 24.75 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 66.15 அடியாகவும் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 48.29 அடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது அணையின் நீர்மட்டம் 100% உயர்ந்து இருப்பது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


Watch – YouTube Click

What do you think?

காவல்துறை சார்பில் SAY NO DRUGS என்ற போதைப்பொருள் விழிப்புணர்வு

தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான தன்னம்பிக்கை விழிப்புணர்வு