in

திருமலையில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம் சர்வ தரிசனதிற்கு 30 மணி நேரம் காத்திருப்பு


Watch – YouTube Click

திருமலையில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம் சர்வ தரிசனதிற்கு 30 மணி நேரம் காத்திருப்பு

திருமலையில் விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி என்பதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. சர்வ தரிசன செய்ய வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் முழுவதும் நிரம்பி வெளிப்பகுதியில்
அவுட்டர் ரிங் ரோடு மற்றும் சிலாதோரணம் வரை 5 கிலோமீட்டர் தூரத்துக்கு வரிசைகள் தொடர்கின்றன.

இந்த நிலையில் இலவச தரிசனத்திற்கு சுமார் 30 மணி நேரம் காத்திருக்கும் நிலையில் கடந்த 10 நாட்களில் ஸ்ரீவாரி மெட்டு மற்றும் அலிபிரி நடைபாதை வழியாக சுமார் இரண்டு லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர் பக்தர்களின் வசதிக்காக ஆக்டோபஸ் பவனில் இருந்து சீலாதோரணம் வரை 8 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு ஒவ்வொரு நிமிடமும் பக்தர்களை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் மோர் மற்றும் அன்னபிரசாதங்களை வழங்கி வருகின்றது.

வரிசைகளில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க தேவஸ்தான விஜிலென்ஸ் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.சனிக்கிழமை மாலை 5 மணி வரை 46,486 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஜூன் 30 வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஐபி பிரேக் தரிசனத்தை TTD ரத்து செய்துள்ளது.


Watch – YouTube Click

What do you think?

கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களை நோட்டமிட்டு தொடர் திருட்டில் ஈடுபடும் கள்வன்

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது