வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கொழாவூர், மற்றும் ராந்தம் உள்ளிட்ட கிராமங்களில் அடுத்தடுத்து வழிப்பறி சம்பவம் அரங்கேறி உள்ளது இதனைத் தொடர்ந்து வழிப்பறியில் நகையை பறிகொடுத்த தஞ்சியம்மாள் (40), மற்றும் குப்பு (68) ஆகியோர் ஒரே நாளில் போளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் டிஎஸ்பி நல்லு தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து வழிப்பறியில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிப்பதற்கான தேடுதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று மாலை மட்டபிறையூர் கூட்டுச்சாலை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது அவ்வழியாக 3 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் போலீசார் சோதனையின் போது நிற்காமல் சென்றுள்ளனர் இதில் சந்தேகம் அடைந்த காவலர்கள் பழைய குற்றவாளியின் ஒருவரின் முகத்தை கண்டறிந்துள்ளனர்.
இதனால் நிற்காமல் சென்ற 3 இளைஞர்களின் மீது சந்தேகம் வலுவடைந்தது பின் தொடர்ந்து அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பிரதீப் 20, சந்துரு 20, ராஜாராம் 37 என்பது தெரிய வந்தது இவர்களில் ராஜாராம் என்பவன் பழைய குற்றவாளி ஆவான் அவன் பெயரில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மீண்டும் ஜாமினில் வெளியே வந்த ராஜாராம் புதிய கூட்டாளிகளை பணத்தாசை காட்டி நண்பர்களாக மாற்றி வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளான்.
பின்னர் அவர்களிடம் இருந்து சுமார் 10 சவரன் நகையை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.