in

நடிகர் விஜய் நடிக்கும் கோட் திரைப்பட காட்சிகள் நள்ளிரவில் எடுக்கப்பட்டது


Watch – YouTube Click

புதுச்சேரியில் கார் வெடித்து சிதறுவது போன்ற கோட் திரைப்படத்தின் சண்டை காட்சிகள் நள்ளிரவில் எடுக்கப்பட்டு வருகிறது.

பிரபல திரைப்பட இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் கோட் திரைப்படம் முடியும் தருவாயில் உள்ளது. இதற்காக புதுச்சேரியில் உள்ள ஏ.எப்.டி பஞ்சாலை, கடற்கரை சாலை, பழைய துறைமுகம், புதுச்சேரி சினிமா நகரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடிகர் விஜய் நடித்த காட்சிகளும் பாடல் காட்சிகளும் படமாக்கப்பட்டது.

தற்போது கோட் படம் முடிவடைய உள்ள நிலையில் சண்டை காட்சிகள் இறுதி செய்யப்பட உள்ளது. இதற்கான காட்சிகளை உருவாக்க இறுதி செய்யும் சூட்டிங்
புதுச்சேரியில் நடைபெற்றது.

பழைய துறைமுக வளாகத்தில் நடைபெற்ற சண்டை காட்சியில் ஒரு கார் மற்றொரு கார் மீது விழுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது.
ஒரு கார் மீது மற்றொரு கார் விழும்போது பயங்கரமான சத்தம் கேட்டதால் பழைய துறைமுகத்திற்கு அருகில் உள்ள மக்கள் ஏதாவது அசம்பாவிதம் நடந்ததா என்று திடுக்கிடும் அளவிற்கு கடுமையான சத்ததுடன் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது.

இது மட்டுமல்லாமல் நள்ளிரவு நேரத்தில் புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை சிவாஜி சிலை முன்பு சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது.அந்த காட்சியில் நடு சாலையில் கார் வெடித்து சிதறி தீப்பற்றி எறிவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது.

அப்போது நள்ளிரவில் சாலைகளில் பிளாக் செய்த பட குழுவினர் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே நிறுத்தினார்கள் பின்னர் காரை பயங்கர சத்தத்துடன் வெடிக்க தீ பற்றி எறிவது போன்று படமாக்கினர் நடிகர் விஜய் நடித்த கோட் படத்திற்காக கார் பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறியது போன்று காட்சிகள் படமாக்கிய சம்பவம் நள்ளிரவில் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இது போன்ற ஷூட்டிங் நடக்கும்போது பொதுமக்களுக்கு முன்னறிவிப்பு தகவல்களை படக் குழுவினர் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


Watch – YouTube Click

What do you think?

தனியார் நிறுவனத்தோடு கைகோர்த்துக்கொண்டு ஊழல் மாநில கழக தலைவர் எஸ்.பி. சிவக்குமார்

சாலையில் சுற்றி திரியும் பன்றிகள் – கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன் எச்சரித்துள்ளார்