in

 உலக பட்டினி தினத்தையொட்டி பொதுமக்களுக்கு மதிய உணவு


Watch – YouTube Click

 உலக பட்டினி தினத்தையொட்டி பொதுமக்களுக்கு மதிய உணவு

 

வந்தவாசி நகரில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உலக பட்டினி தினத்தையொட்டி பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு மே 28ஆம் தேதி ஆகய நேற்று தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் என்று அறிவித்ததின் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதியில் வந்தவாசி, தெள்ளாறு, பெரணமல்லூர் ஆகிய ஒன்றிய தலைமையிடங்களில் மதிய உணவு வழங்கப்பட்டது.

இதையொட்டி,பழைய பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய தலைவர் ஜெ.சங்கர் தலைமையில் நடைபெற்றது.

வந்தவாசி ஒன்றிய இளைஞரணி செயலாளர் வி.சுமன், ஒன்றிய செயலாளர் ஜெ.திருமலை முன்னிலை வகித்தனர்.

வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக்கழக ஒருங்கிணைப்பாளர் எம். உதயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய நிர்வாகிகள், தினேஷ், கீழ்நர்மா சிவப்ரகாஷ், கீழ்சாத்தமங்கலம் வினோத், அன்பழகன், சென்னாவரம் எ. சுபாஷ்,தழுதாழை ஹரி,எம்.தினேஷ், ராஜசேகர், ராஜமாணிக்கம், குமரேசன், சிவானந்தன், பிரபாகரன், தெள்ளார் சிலம்பரசன், பிரபு, அய்யனார், சதீஷ், பாண்டியன், மூர்த்தி, சண்முகம், பிரகாஷ், செல்வராஜ், உதயா, சண்முகம், மருதாடு அஜீத், பாபு, கார்த்திக், சஞ்சய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

அதி வேக வண்டிகளில் சைலன்ஸரை மாற்றி கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர்கள் கொத்தாக அள்ளிய போலீஸ்

பாதாள செம்பு முருகன் பக்தருமான இயக்குனர் வசந்த் மனைவியுடன் சாமி தரிசனம்