முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்த பள்ளிவாசல் இடிக்கும் பனி தொடங்கப்பட்டது
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த பாமனி ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலை இங்கு வாழும் முஸ்லிம்கள் சுமார் முப்பதுவருடங்களுக்கும் மேலாக தொழுகைக்காக பயன்படுத்தி வந்தனர்.
இது முன்னாள் ஜமாஅத் தலைவர் எம் ஹாஜாமைதீன் செயளாலர் எஸ் எம் ஒய் பாரக் தலைமையில் கட்டப்பட்டது.
தற்போது கட்டிடம் பழுதடைந்து மழை காலத்தில் தண்ணீர் கசிவு ஏற்படுவதால் புதிய பள்ளிவாசல் கட்ட வேண்டும் என ஜமாஅத் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான முன்னேற்பாடுகள் கட்டிடக் குழு தலைவர் எஸ்எம்ஒய் பாரக் செயளாலர் எஸ் தௌபீக் மற்றும் கட்டிடக் குழு உறுப்பினர்கள் மும்முரமாக செய்துவந்த நிலையில் இன்று பழய பள்ளிவசலை இடிக்கும் பனி தொடங்கப்பட்டது.
புதிதாக கட்டப்பட்ட உள்ள பள்ளிவாசல் கட்டுமானபனிக்கான நிதியை அனைத்து ஊர் ஜமாஅத்தார்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நன்கொடையாக பெறுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.