in

புதுப்பிக்கப்பட்ட அம்பாசிடர் காரில் முதலமைச்சர்–துணை நிலை ஆளுநர் ஜில்லுனு ஒரு பயணம்


Watch – YouTube Click

புதுப்பிக்கப்பட்ட அம்பாசிடர் காரில் முதலமைச்சர்–துணை நிலை ஆளுநர் ஜில்லுனு ஒரு பயணம்

 

புதுப்பிக்கப்பட்ட அம்பாசிடர் காரில் முதலமைச்சர்–துணை நிலை ஆளுநர் கடற்கரை சாலையில் ஜில்லுனு ஒரு பயணம். இருவரும் புதுச்சேரியை மேம்படுத்துவது குறித்து விவாதித்ததாக முதலமைச்சர் ரங்கசாமி பேட்டி.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி யமஹா ஆர்.எக்ஸ் 100 பைக் பிரியர். ஒவ்வொரு தேர்தல் ஓட்டுப்பதிவின் போதும், அந்த பைக்கிலேயே, ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று, ஓட்டுப்போடுவதை சென்டிமென்ட்டாக வைத்துள்ளார். சமீபத்தில் தன்னுடைய யமஹா பைக்கை சென்னைக்கு அனுப்பி பழுது பார்த்து கொண்டு வந்தார்.

இது ஒருபுறம் இருக்க, கடந்த 1997ம் ஆண்டு, ரங்கசாமி எம்.எல்.ஏ.வாக இருந்தபோது முதன் முதலில் அம்பாசிடர் கார் ஒன்றை வாங்கி பயன்படுத்தினார். அந்த கார் பழுதானதால் வீட்டில் ஓரமாக நிறுத்தி வைத்திருந்தார். சமீபத்தில் அந்த காரை, துாத்துக்குடியில் பழுது பார்த்து, புதுச்சேரிக்கு கொண்டு வந்தார். அந்த காரின் முன் இருக்கையில் முதல்வர் அமர்ந்து மகிழ்ந்தார். இதையடுத்து உள்ளூரில் அந்த காரை பயன்படுத்த திட்டமிட்டிருந்தார்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட துணை நிலை ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் ரங்கசாமியிடம், இது குறித்து விசாரித்தார். அப்போது முதலமைச்சர் ரங்கசாமி தனது அம்பாசிடர் காரில் உடனடியாக ஆளுநர் மாளிகை சென்றார். அங்கு அவரை துணை நிலை ஆளுநர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.

அப்போது முதல்வர் தனது புதுப்பிக்கப்பட்ட காரில் பயணம் செய்ய கவர்னருக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்ற கவர்னர், அந்த காரில் அவருடன் இணைந்து பயணம் செய்தார்.

இருவரும் கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்டு, பழைய சாராய ஆலையில் இருந்து கடற்கரை சாலையில் சிறிது நேரம் பயணித்தனர். இதையடுத்து கவர்னர் மாளிகைக்கு அடுத்த சிறிது நேரத்தில் மீண்டும் திரும்பி வந்தனர். இந்த கார் பயணம் தொடர்பாக, முதல்வருக்கு, கவர்னர் நன்றி தெரிவித்தார்

இது குறித்து முதல்வர் ரங்கசாமி செய்தியாளரிடம் தெரிவிக்கையில் இது நான் முதன் முதலில் வாங்கிய மிக மிக நல்ல ராசியான அம்பாசிடர். இதில் துணை நிலை ஆளுநருடன் இணைந்து பயணித்தது மகிழ்ச்சி. புதுச்சேரி மாநிலத்தை சிறப்பான நிலைக்கு கொண்டு வர, என்னென்ன முயற்சிகள், நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து இருவரும் பேசினோம் தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

சாதி மாறி திருமணம் செய்த காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு எஸ்.எஸ்.பி அலுவலகத்தில் தஞ்சம்

குப்பைகளை அகற்ற இலவச தொலைபேசி எண்கள் அறிமுகம்