குப்பைகளை அகற்ற இலவச தொலைபேசி எண்கள் அறிமுகம்
புதுச்சேரி மண்ணாடிபட்டு பகுதியில் குப்பைகளை அகற்ற இலவச தொலைபேசி எண்கள் அறிமுகம். குப்பைகளை சாலையில் வீசினால் ஆயிரம் ரூபாய் அபராதம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எச்சரிக்கை.
புதுச்சேரியில் தனியார் நிறுவனம் கடந்து பத்து ஆண்டுகளாக குப்பைகள் அள்ளும் பணியை செய்து வருகிறது. ஆனால் சில மாதங்களாய் குப்பைகள் சரியாக வாரவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது.
இதனை சுட்டிக்காட்டி துணைநிலை ஆளுநர் அந்த நிறுவனத்திற்கு சேர வேண்டிய நிதி வழங்கும் கோப்பினை நிறுத்தி வைத்துள்ளார்.
புதுச்சேரியில் குப்பைகளை இல்லாத நிலை உருவாக்கினால் மட்டுமே அந்த கோப்புக்கு அனுமதி கொடுப்பேன் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அதிகாரிகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட திருக்கனூரில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு சென்ற பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன் குப்பைகளை சாலையில் வீசி எறிய கூடாது குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் மட்டுமே வழங்க வேண்டும் என்று நோட்டீஸ்களை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன்..புதுச்சேரியில் மண்ணாடி பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக இலவசமாக தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
எனவே வணிக நிறுவனங்கள் குப்பைகளை கண்டபடி சாலையில் வீசாமல் குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் மட்டுமே வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சில நாட்களில் தூய்மை பணியாளர்கள் வரவில்லை என்றால் இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அவர்களை வரவழைத்து குப்பைகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர் இதை மீறி சாலையில் குப்பைகளை வீசினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார்.