in

ஆவின் பால் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு ஸ்டிரைக் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ஆவின் பால் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு ஸ்டிரைக் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

 

திருச்சி, பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் – ஆவின் பால் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு வாடகை தராததால் ஸ்டிரைக்

திருச்சி கொட்டப்பட்டு ஆவின் நிறுவனத்தில் இருந்து திருச்சி, கரூர் பெரம்பலூர் அரியலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட முகவர்களுக்கு என தினமும் 1.20 லட்சம் லிட்டர் பாக்கெட் பால் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த பாக்கெட் பால்கள் ஒப்பந்த அடிப்படையில் 42 சரக்கு வேன் மூலம் முகவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த 1ஆண்டாக இந்த வேன்களுக்கு தர வேண்டிய வாடகை தொகையில் 2 மாதம் நிலுவைத் தொகை வைத்து கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 3 மாதத் தொகையும் இதுவரை கொடுக்கவில்லை.

இது குறித்து ஆவின் நிர்வாக அதிகாரியிடம் பலமுறை கேட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதையடுத்து நள்ளிரவு முதல் ஆவின் வேன்களில் பாக்கெட் பால்களை ஏற்றாமல் ஆவின் பால் வண்டி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தின் காரணமாக திருச்சி பெரம்பலூர் அரியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆவின் பால் சப்ளை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, இதனால் இன்றைய தினம் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும்.

What do you think?

இந்தியன் 1 ரீ…ரிலீஸ்…இத்தனை மொழிகளிலா?

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி