பொதுத் தேர்வில்100% தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பனிரெண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், செங்கல்பட்டு மாவட்டத்தில் பன்னிரெண்டாவது மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சியடைந்த பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருள்ராஜ் பங்கேற்று, பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி அளித்த 72 பள்ளிகளைச் சேர்ந்த 461 ஆசிரியர்கள் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும்,பள்ளி கல்வித்துறைக்கு உறுதுணையாக இருந்த 10 தன்னார்வலர்களுக்கும் பாராட்டி சான்றிதழ்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.
இந்த நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் இரவிசந்திரன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் உதயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் மறைமலைநகர் அரசு பள்ளியில் கல்வி பயின்று ஏழ்மை நிலையில் இருந்த அக்ஷயா என்ற மாணவிக்கு தொண்டு நிறுவனத்தால் வழங்கப்படும் ரூபாய் 25000 நிதி உதவி மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் மாணவி அக்ஷயாவிற்கு வழங்கினார்.