in

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புகையிலை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது


Watch – YouTube Click

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புகையிலை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது

 

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று புகையிலை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதுகுறித்து திருநெல்வேலி மருத்துவர் கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி பாலன் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆண்டுதோறும் புகையிலை மற்றும் அது சார்ந்த பொருட்களை உபயோகப்படுத்துவதால் பலரும் அதற்கு அடிமையாகி பல நோய்களுக்கு ஆளாகின்றனர்.

மேலும் புகைப்பது வாயில் போட்டு மெல்லுவது போன்ற பழக்கங்களால் புகையிலை பொருட்கள் உபயோகிப்பது எளிதாக அடிமையாக காரணமாகிறது. உடல் ரீதியாக நுரையீரல் தொற்று இருதய கோளாறுகள் வாயில் வயிற்றில் புண் உண்டாகுதல் மற்றும் இரத்த நாளங்களில் பாதிப்புகளை உருவாக்கி ஸ்ட்ரோக் ஹார்ட் அட்டாக் போன்ற நோய்களையும் காலப்போக்கில் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு மன நோய்கள் மற்றும் புற்றுநோய் இதனால் உண்டாகிறது.

தமிழ்நாட்டில் சராசரியாக 20.1% 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் 4.9% பெண்களும் புகையிலை பொருட்களை உபயோகப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இது பல தொற்று இல்லா நோய்கள் உண்டாக காரணமாக அமைகிறது இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் உலக சுகாதார மையம் மூலமாக புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் மே மாதம் 31-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் டாக்டர் ரேவதி பாலன், துணை முதல்வர் டாக்டர் பால சுப்பிரமணியன் ,மூளை நரம்பியல் நிபுணர் டாக்டர் சரவணன், நெஞ்சக நோய் நிபுணர் டாக்டர் மதன், மனநோய் மருத்துவத்துறை தலைவர் டாக்டர் ரமேஷ் பூபதி மற்றும் மருத்துவ மாணவர்கள் செவிலியர் மாணவர்கள் உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


Watch – YouTube Click

What do you think?

சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

செஞ்சியில் சினிமா பட பாணியில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது