திருவாவடுதுறை ஆதீன 24 வது மடாதிபதியின் ஜென்ம நட்சத்திர விழா
பிரதமர் மோடியிடம் செங்கோல் வழங்கிய திருவாவடுதுறை ஆதீன 24 வது மடாதிபதியின் ஜென்ம நட்சத்திர விழா, ஆதீன மடத்தில் நூலக கட்டிடம் திறப்பு ரத்ததான முகாம் மருத்துவ முகாம் மற்றும் அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தமிழ்நாட்டின் தொன்மையான சைவ ஆதீன மடங்களில் ஒன்றான 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த திருவாவடுதுறை விளங்கி வருகிறது. நாடு சுதந்திரம் பெற்ற போது அதற்கு அடையாளமாக 1947 இல் அப்போதைய பிரதமர் நேருவிடம் ஆதீனம் சார்பில் செங்கோல் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் மோடி இடம் சுதந்திர செங்கோலை திருவாவடுதுறை ஆதீன 24 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலமான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கினார். புகழ்பெற்ற இந்த மடத்தின் 24 ஆவது மடாதிபதியின் ஜென்ம நட்சத்திர விழா வைகாசி பூரட்டாதி நட்சத்திர தினமான இன்று கடைப்பிடிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது தொடர்ந்து ஆதீன மடத்தில் சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டது ஜென்ம நட்சத்திர விழாவின் ஒரு பகுதியாக மடத்தில் தமிழக அரசின் சார்பில் நூலக கட்டிடத்தை ஆதீன மடாதிபதி திறந்து வைத்து புத்தகங்களை வழங்கினார்.
அதனை அடுத்து பக்தர்கள் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது மேலும் இலவச மருத்துவ முகாமையும் மடாதிபதி குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தார் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் தமிழ் அறிஞர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனிடைய தாயாரம்மாள் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.